ஓய்வின் நகைச்சுவை 143 சாமியாராகப் போகிறேன்
கணவன்: ஏண்டி லைப் ஒரே டல்லாயிருக்கு. பேசாமே சாமியாரா போயிடலாமுன்னு இருக்கேன்
மனைவி: போங்க போங்க இப்போவெல்லாம் சாமியார் லைப் ரெம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்குமுனு சொல்ராங்க. ஆனால் போகும்போது மறக்காம பேங்க் பாஸ்வேர்ட், பின் நம்பர் எல்லாம் கொடுத்துக்கிட்டு போங்க சரியா! ……. தெரி……யும் இருந்தாலும் சான்ஸ் எடுக்கக்கூடாது பாருங்கோ. மொபைல் எடுத்துக்கிட்டு போக மறக்காதீங்க. இப்போ சாமியாருக்கும் அது இல்லாம முடியாது. என்..னே முன்னமே தெரிந்திருந் தால் உங்களுக்கு பிடித்த முறுக்கு ஒரு மாதத்திற்கு செய்து வைத்திருக்கமாட்டேன்
கணவன்: சரி சரி ஒரு பேச்சிற்கு சொன்னேன் ரெம்ப ஒண்ணும் வித்தியாசமில்லை இங்கேயே இருக்கிறேன்