நல்ல காலம் பொறக்குது

யக்கா, நேத்து ராத்திரி குடுகுடுப்பைக்காரன் தொல்லை தாங்கமுடியல யக்கா.
@@@@
ஆமாம்டி மூத்துக்கண்ணி எங்க வீட்டுப் பக்கம் வந்து அதையே சொன்னான்டி. அதோட விடாம விடிஞ்சதும் சூரியனைக் கண்டா எலை மேலே இருக்கும் பனித்துளி மறைய மாதிரி உங்க கஷ்டம் எல்லாம் தீரு. ஜக்கம்மா சொல்லற, ஜக்கம்மா சொல்லறா. நல்ல காலம் பொறக்குதுன்னு சொல்லிட்டுப் போனான்டி.
@@@@@
ஆமாம் யக்கா, வெடிஞ்சதும் வாசலுக்கு பெருக்கித் தண்ணி தெளிக்க வந்தேன். ஒரு சின்ன காயிதப் பை கெடந்தது. அது எடுத்துப் பாத்தா அந்தப் பைக்குள்ள ஒரு சப்பாத்தி நாலா மடிச்சுக் கெடந்தது. தூக்கி நாய்க்குப் போட்டன் யக்கா. நாயி அதக் கடிச்சுத் தின்னற போது ஒரு புது நேட்டா ஊதாப்புக் கலர்ல இருந்தது. நான் அதப் புடுங்கிப் பாக்குறதுக்குள்ள நாயி அந்தச் சப்பாத்தியத் தூக்கிட்டு வேகமா ஓடி கெணத்தடில நின்னு முழுசா சாப்பிட்டிருச்சு.
@@@@
நானும் அந்த வேலையைத்தான்டி செஞ்சேன். குடுகுடுப்பக்காரன் சொன்ன அதிர்ஷ்டம் நாயி வயித்தில போயிருச்சுடி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
முற்றிலும் கற்பனை.எதோ
ஒரு மாநிலத்தில் ஒரு ஊரில் சப்பாத்தியில் ரூபாய் நோட்டை வைத்துச் சுட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது.

எழுதியவர் : மலர் (16-Apr-19, 8:33 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 70

மேலே