என்னைத் தேடி
என்னைத் தேடி . . .
என் மனமெங்கும் மானாவாரியாய் விளைந்த
மெளனத்தின் வேர்தன்னில்
இருள் ஊற்றி வளர்க்கின்றது
என் தனிமை…..
என் ஆழ்மனப்பரப்பதனில் அடுக்கிவைத்த
ஆசைப்பொதி எல்லாம்
மனச்சரிவில் புதையுண்டு
மட்கிப்போக பார்க்கின்றது….
எனக்குள் மூழ்குகின்றேன்
என்னையே தேடுகின்றேன்
காற்றில் துலாவிய கரந்தன்னில்
வெறுமையை அள்ளிக் குவிக்கின்றேன்….
புறமிருந்து கரம் ஒன்று
கரை சேர்க்க நீளும் என்று
நம்பிக்கை உதிர்ந்த பின்னே
துளிர்க்கின்றேன் புதிதாக…..
எனக்குள் புதைந்த என்னைக்
தேடிக் கண்டுவிட்டேன்….
அகல் விளக்கேந்தி அங்கே
தடம் காட்டுவதாய் என் முயற்சி……
சு.உமாதேவி