ஆராய்ந்து பார்த்தால் ஒன்னுமில்லே

மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே!
ஆராய்ந்து பார்த்தால் ஒன்னும் இல்லே!
பொய்க்கும் புரட்டுக்கும் பஞ்சமில்லே!
பூமியில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதில் அர்த்தமில்லே!
தெள்ளி நீரோடை ஆற்றுக்குள்ளே!
சிவப்பு இரத்தம் ஓடுதடா இந்த மனிதராலே!

பாடிய பாட்டிலே பொய் இருக்கும்!
ஆடிய ஆட்டத்திலே ஆபாசம் கலந்திருக்கும்!
மூளையும் கெட்டதடா கண்ணாலே!
உடலும் அழிகிறதடா மனப் புண்ணாலே!
உயிரும் பறந்ததடா நோயாலே!
இந்த பிணத்தை எரியுங்களடா சுடுகாட்டிலே!

ஐம்பதைத் தாண்டுவது அரிதாம்!
இருநாற்பதைக் கடப்பது பெரிதாம்!
ஏதப்பா! நீ கண்ட வாழ்க்கை?
உடல் தளர்ந்து தன் எடையை தன் கால்களும் தாங்காத போது பேசட்டும் அவன் வீரவசனம்!
ஊரும் சிரிக்க நாடும் நகைக்க பேசட்டும் அவன் வீரவசனம்!

அது என்னடா கண்களில்?
கண்ணீர் வழிகிறதா?
கலக்கம் பிறக்கிறதா?
போராட்டத்துள்ளே வாழ்ந்து போர் அடிக்கவில்லையா?
பேராசையாலே சம்பாதித்தது என்ன?
காரணமில்லாமல் ஏதடா?
ஆராய்ந்து பார்த்தால் நீ அறிந்தது ஒன்னுமில்லையடா!?
பொய்யும் புரட்டும் இயல்பா?
சிந்திக்கும் திறனெல்லாம் வீணானதே!
உரிமையில்லாது கொண்டாடும் உன் உரிமை நிலைக்காதே!
நீ அழிவாய்!
மரணம் காத்திருக்கு உன் வாசலிலே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Apr-19, 12:20 am)
பார்வை : 2883

மேலே