அவளின் முடிவுக்காக

அவளின் முடிவுக்காக .

இன்று இறுதி நாள்
காதலில் வெற்றியா அல்லது தோல்வியா நிர்ணயிக்கும் நாள்.
அவள் எனக்கு முடிவாக விடை கூறப்போகும் நாள்.
காயா அல்லது பழமா
பதில் அவளிடம் .
சஸ்பெண்ஸ் உடையும் நாள் .
பரபரப்புக்கு பஞ்சம் இல்லை
ஒரு வருட பின் தொடரல்
காதலன் என்ற பதவி கிடைக்குமா?
தேர்தல் என்றால்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
எளிதில் கூறிவிடலாம்.
பரிட்சை முடிவு என்றால்
எழுதியதை வைத்து தீர்மானித்து விடலாம்.
இது அப்படி இல்லையே
ஆறு மாதம் ஆனது
அவள் கடை கண் பார்வை
என் மீது படுவதற்கே
இன்று அவள் பதில் எனக்கு
சாதகமாக இருக்குமா
அல்லது பாதகமாக இருக்குமா?
அப்படி என்ன பேரழகியா அவள்
உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது
ஆம் அவள் பேரழகியே
அது பெரிய விஷயம் அன்று
ஆச்சிரியம் அவள் ஒரு நெருப்பு
நவீன கால பெண்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவள்
இன்றைய காலகட்டத்தில்
ஆண்டராயிடு போன் கூட இல்லாதவள்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்
அப்போ குடும்ப குத்து விளக்கா
மீண்டும் உங்கள் வினா என் காதில்
பளிச்சென்று விழுகிறது .

அப்படியும் ஆணிதரமா கூறிவிடமுடியாது
பாரதி பற்றியும், பாரதிதாசன் பற்றியும்
அவள் கல்லூரி மேடையில் எழுச்சயுடன் ஆற்றிய உரை
அனைவரையும் வியக்க வைத்தது.
துளியும் தாழ்வு மணபான்மை இல்லாதவள்.
அப்போ அவள் எப்படி தான்
பெண் எவ்வளவு தான் முன்னேறினாலும்
கலாச்சாரம், பண்பாடு மறக்க கூடாது
என்பதில் உறுதியாக இருப்பவள்.

வழி மீது விழி வைத்து நான் அவளுக்காக காத்திருக்க
பளிங்கு சிலையன தமிழ் பெண்ணாக சேலை உடுத்தி
அழகு தேவதையாக
என் முன்னே என்னவள்
அவதரித்தாள்.

துண்டு சிட்டு ஒன்று கொடுத்து விட்டு
சற்று நேரத்தில் மாயமாக மறைந்து விட்டாள்
ஏனோ கை நடுங்கியது
என்ன எழுதியிருப்பாள்
பயம் கலந்த
பதட்டத்துடன் பிரித்தேன்
படித்தேன்
அப்படியே அதே இடத்தில் மயங்கி விழுந்தேன் .

கும்பல் கூடியது
சிறிது நேரம் பதட்டம் முடிவுக்கு வர
கூட்டம் கலைந்தது
உற்ற நண்பன் என்னை சோகமாக உற்று நோக்கி கேட்டான்
மச்சான், அவ முடிவா என்ன தான் சொன்னா?
அவ என்னை … காதலிக்கிறாடா… மச்சி..
- பாலு.

எழுதியவர் : பாலு (23-Apr-19, 3:24 pm)
பார்வை : 512

மேலே