கதறலை குழிவெட்டிப் புதை....
கோடிடுக.....!
இன்னல் தரும்
இழிவோருக்கும்
இறை கொண்டு
இரை தேடும்
இகழோருக்கும் உறைக்கவே
என
தடுத்தாட்கொள்ள
கோடிடுக......!
குழியிடுக.....!
உள்ளம் எங்கிலும்
உறுத்தும் நெருஞ்சி
முட்களாய்
குமைந்து குமைந்து
அழுத ஆற்றாமை
அனைத்தையும்
கொட்டிப் புதைக்கவென
குழியிடுக.....!
தணலிடுக....!
எட்டி உதைத்த
கால்களுக்கும்
தட்டிப் பறித்த
கைகளுக்குக்கும்
kaamakadumpuNal
கக்கிய கண்களுக்கும்
குருதி தாகம்
தீரவே என
தணலிடுக....!