தமிழ் மொழி
தடுக்கி விழுந்தால் மட்டும் அ ஆ..
சிரிக்கும் போது மட்டும் இ ஈ ..
சூடு பட்டால் மட்டும் உ ஊ
அதட்டும் போது மட்டும் எ ஏ
ஐயத்தின் போது மட்டும் ஐ..
ஆச்சிரியத்தின் போது மட்டும் ஒ ஓ
வக்கனையின் போது மட்டும் ஔ..
விக்கலின் போது எக்கு...
என்று தமிழ் பேசி மற்ற நேரங்களில்
வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி தமிழ் மொழி என்று...