அருவி

மலை மங்கை அணிந்திட்ட வெள்ளி கொலுசோ!
அவளுக்கு வானம் தந்த சீதனமோ!
நிலாப் பெண்ணுக்கு அழகு காட்டவே
பூமிக்கு வந்திட்ட பால் வண்ண மங்கையோ!

காதலனின் கரம் பட்டு வளைந்து நெளிந்து வந்தவளோ !- கொடும் பாறை தன்னில்
குளிராடி வந்தவளோ! கானகத்து வளங்களை
வாரி வந்தவளோ! மண்ணவர் தாகம் தீர்க்க
விண்ணில் இருந்து வந்திட்ட மலை மங்கையோ!

எழுதியவர் : (4-Sep-11, 10:20 pm)
பார்வை : 4158

மேலே