வெள்ளை நிலா

பழுதில்லா வான தோட்டத்தில்
ஒரு நாள் பகல் நிலவன்
வந்து போனபின் -நட்சத்திர
வெள்ளித் தோழியர் புடை சூழ - வட்ட
வெண் நிலாப் பெண் வந்திட்டாள்

அங்கே

உழைத்தவர் உடல் சோர்ந்து
ஓரிடத்தில் தங்கள் உரஓடு
அயர்ந்து துக்கங் கொள்ள - தென்றலைத்
தூதூ விட்டு குளிருட்டிய வட்ட நிலாப் பெண்
நீலவானப் போர்வயிலே மறைந்து
வெளியில் வந்தாள்

அப்போது

அந்தக் காளையவனை
கடைக் கண்ணால் கட்டிட்டகட்டழகி
கட்டிலில் படுத்து காளைஅவன் நினைப்போடு
மூடா இமையோடு முனகிக் கிடக்கையில்

அங்கே

எட்டி பார்க்கும் வட்ட நிலாவை அவள்
ஏக்கமாய் பார்க்கின்றாள்
விழியால் தொட்டவளை
விரலால் தொடமுடியாமல்
அவள் கட்டவிழ்ந்த கூந்தலில் என்று
முகம் மறைப்பேனோ - என்று
தொட்டு அவளை சுவைத்திடவே
துடிக்கும் இள மனதை
கட்டி போடா முடியாமல்
காலையவன் தவிக்கிறான்

அப்போது

பால் அண்ணக் கிண்ணத்தோடு
இடுப்பில் இருந்திட்ட பால் இளம்
பச்சிளம் குழந்தைக்கு
வானத்தைக் காட்டி
வா .... வா ..... என அழைக்கும்
அன்னையின் அழைப்புக்கு
அம்புலியாய் வந்து அழகு
காட்டும் அந்த வானத்து வெண்ணிலா

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Sep-11, 6:41 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 895

மேலே