ஆசிரியர் தின வாழ்த்துக்கவிதை !!!!!!!!!!!!!!!

கல்வி என்ற கடலைக் கடக்க

கனிவுடன் வந்த கருணை மகான் .

துடுப்பாய் வாழ்வில் நமக்காய் வந்து

தூரம் வரையில் கொண்டு சேர்த்து

தரிசாய் கிடந்த மாணவன் மனதில்

தானியமாக கல்வி விதைத்து

உலகம் விளங்க விளைச்சல் பெருக்கி

ஊரார் புகழ உத்தமனாக்கி

கைமாறு ஏதும் எதிர்பாரா

கலியுக கடவுளே நம் ஆசான் .....



இந்த கவிதையை இந்த ஆசிரியர் தின நன்னாளில் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்ல மாணவனாக சமர்ப்பிக்கிறேன் .........

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (5-Sep-11, 7:29 pm)
பார்வை : 8587

மேலே