பாரதியார் புகழோவியம்!

திகழ்பரத கண்டத்தின் தேசியகவி - பாட்டைத்
திறம்பட இயற்றிய தேன்கவி - தமிழின்
புகழ்தனைப் பரப்பிய பாரதிக் கவி - புவியில்
பைந்தமிழ்தனை வளர்த்த பாரதக் கவி

அகத்தே தமிழ் கொண்ட அருட்கவி
அறம்தனை உணர்த்திய அமரகவி
சுகமென செந்தமிழைக் காத்த கவி
சூரியனை நிகர்த்த அவர் மகாகவி

தங்கத் தமிழ்தனில் அவர் ஓர் மின்னல்
தகைசான்ற கொள்கையை கொண்ட நற்கொண்டல்
சங்கத்தின் பின்னே வீசிய தமிழ்தென்றல்
சமதர்ம சாத்திரத்தை சார்த்திய அண்ணல்

`பாரதியார்' எனப் போற்றுவோர் மக்கள்
`பாரதி' - யார்? எனத் தூற்றுவோர் மாக்கள்
பாரதத் தமிழ்தனில் பூத்த அவர் பாக்கள்
பார் எனும் மரத்தினில் பசும்தமிழ் பூக்கள் !!

எழுதியவர் : கி. சுரேஷ் குமார் (6-Sep-11, 1:34 am)
பார்வை : 810

மேலே