வண்ணானும் கழுதையும்

பாவம் கழுதை வாயில்லா ஜீவன்
வண்ணான் ஏற்றிய சுமக்க முடியா
சுமையை சுமந்து சென்றது …..
கழுதை வண்ணானின் அடிமை!
அதன் பின்னால் வண்ணான் மெல்ல
சென்றுகொண்டிருந்தான் ஏதோ சிந்தனையில்
வண்ணான் அவ்வூர் வணிகனின் அடிமை
காலம் காலமாய் தந்தைக்கு முன் தந்தை
காலம் முதல் வணிகன் குடும்பத்தின் அடிமை
வண்ணான் குடும்பம் !
செட்டியார் வீட்டு துணிச்சுமை அத்தனையும்
இவன் தாங்கி துவைத்து வெளுத்து கொடுப்பான்
அதற்க்கு காசில்லை செட்டியார் வெறும்
பத்துப்படி நெல் அளந்து தருவார் செலவைக்கு
அதனால் வண்ணான் அவருக்கு கொத்தடிமை!
ஒரு அடிமை வாயில்லா ஜீவன்
சொல்லமுடியாமல் மெல்லமுடியாமல்
வேதனை அனுபவிக்க …...இவன் வாயிருந்தும்
அடிமை வேதனையில் உழல்கின்றான் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-May-19, 9:47 am)
பார்வை : 72

மேலே