ஒரு மடக்கு தேநீர்

ஒரு மடக்கு தேநீர்
விழுங்கையில்
உன் நினைவும்
நிழலாய் விழுகிறது

எங்கோ நீ
நலமென்பதறிந்து
மகிழ்கிறேன்
நீயும் அப்படித்தானே

எனை கைபிடித்தவன்
என் இதயத்தில்
இறங்கி சிரித்தபோது
அந்த சிரிப்பிலே
உனை என்பதை விட
எனையே மறக்கிறேன்

நானருந்தும் தேநீரில்
அவனும் ஒரு மடக்கு கொடு
எனும்போது நீ
அவனுள் வந்து போகிறாய்

மும்முடி போட்டவன்
அருகில் வந்து
மனதைப் படித்தவனாய்
விலகி அமருகையில்
உனை மறந்து
அவனருகில்
நெருங்குகிறேன்

கடைக்குட்டி மாமனாய்
நீயும்
கடைக்குட்டி அக்கா மகளாய்
நானும்
ஒரே வீட்டில் ஓடிப்பிடித்து
விளையாடிய
உன்னை மறக்கும் பற்றுக்கோளாய்
என்னவன்
அனுசரனை

உனை விலக்கி
என்னவன் கை பற்றிக்கொள்கிறேன்

அவ்வப்போது
வந்துபோகும்
உன் முகத்தை
என்னவன்
அன்பிலும்
அருகாமையிலும்
அழித்துமறைக்கிறேன்

நமக்கு பேசிமுடிக்க
நினைத்தபோது
பெரியவர்கள்
மனக்கசப்பில்
நின்ற திருமணத்திற்கு
நம் ஜாதகம்
சாதகமானபோது

எனைத்தேடிவந்தவனை
மனமுடிக்க
என் ஜாதகம்
சாதகமாகிப்போனது

உனது திருமணம் முடிய
எனது பெற்றோரும்
எனது திருமணம் முடிய
உனது பெற்றோருமமருந்திடுகிறான்


உனக்கென்று
வந்தவளை நீயும்
எனக்கென்று
வந்தவனை நானும்
கை பிடித்தோம்

என் கை பிடித்தவன்
கவிதையாய்
எனைப் படித்தான்

கடந்ததை நினைக்க
பயந்தவள்
அவன் தோள் சாய்ந்து
திரும்பிப்பார்க்கிறேன்

உன் அம்மு எனும் அழைப்பு
என்னவனின் கண்ணம்மாவில்
கரைந்து அழிகிறது

உற்றார் வீட்டில் உனைப்பார்க்க நேரையில்
வயிற்றைச் சுருட்டும்
சங்கடம்
அவன் பார்வையில்
அடிபட்டுப்போகிறது

சமைக்கையில் பட்ட
காயத்தில்
உறங்கும்போது தடவும்
கழிம்பில்
என் மனக்காயத்திற்கும்
மருந்திடுகிறான்

உனை உறவு சொல்லி
அழைக்காத நான்
என்னவனை
மூச்சிற்கு மூன்று முறை
மாமா மாமா என்கிறேன்

ஒரு மடக்கு
தேநீரில் மட்டும்
தடுமாறி நிற்கிறேன்






ஒரு மடக்கு தேநீர்
விழுங்கையில்
உன் நினைவும்
நிழலாய் விழுகிறது

எங்கோ நீ
நலமென்பதறிந்து
மகிழ்கிறேன்
நீயும் அப்படித்தானே

எனை கைபிடித்தவன்
என் இதயத்தில்
இறங்கி சிரித்தபோது
அந்த சிரிப்பிலே
உனை என்பதை விட
எனையே மறக்கிறேன்

நானருந்தும் தேநீரில்
அவனும் ஒரு மடக்கு கொடு
எனும்போது நீ
அவனுள் வந்து போகிறாய்

மும்முடி போட்டவன்
அருகில் வந்து
மனதைப் படித்தவனாய்
விலகி அமருகையில்
உனை மறந்து
அவனருகில்
நெருங்குகிறேன்

கடைக்குட்டி மாமனாய்
நீயும்
கடைக்குட்டி அக்கா மகளாய்
நானும்
ஒரே வீட்டில் ஓடிப்பிடித்து
விளையாடிய
உன்னை மறக்கும் பற்றுக்கோளாய்
என்னவன்
அனுசரனை

உனை விலக்கி
என்னவன் கை பற்றிக்கொள்கிறேன்

அவ்வப்போது
வந்துபோகும்
உன் முகத்தை
என்னவன்
அன்பிலும்
அருகாமையிலும்
அழித்துமறைக்கிறேன்

நமக்கு பேசிமுடிக்க
நினைத்தபோது
பெரியவர்கள்
மனக்கசப்பில்
நின்ற திருமணத்திற்கு
நம் ஜாதகம்
சாதகமானபோது

எனைத்தேடிவந்தவனை
மனமுடிக்க
என் ஜாதகம்
சாதகமாகிப்போனது

உனது திருமணம் முடிய
எனது பெற்றோரும்
எனது திருமணம் முடிய
உனது பெற்றோருமமருந்திடுகிறான்


உனக்கென்று
வந்தவளை நீயும்
எனக்கென்று
வந்தவனை நானும்
கை பிடித்தோம்

என் கை பிடித்தவன்
கவிதையாய்
எனைப் படித்தான்

கடந்ததை நினைக்க
பயந்தவள்
அவன் தோள் சாய்ந்து
திரும்பிப்பார்க்கிறேன்

உன் அம்மு எனும் அழைப்பு
என்னவனின் கண்ணம்மாவில்
கரைந்து அழிகிறது

உற்றார் வீட்டில் உனைப்பார்க்க நேரையில்
வயிற்றைச் சுருட்டும்
சங்கடம்
அவன் பார்வையில்
அடிபட்டுப்போகிறது

சமைக்கையில் பட்ட
காயத்தில்
உறங்கும்போது தடவும்
கழிம்பில்
என் மனக்காயத்திற்கும்
மருந்திடுகிறான்

உனை உறவு சொல்லி
அழைக்காத நான்
என்னவனை
மூச்சிற்கு மூன்று முறை
மாமா மாமா என்கிறேன்

ஒரு மடக்கு
தேநீரில் மட்டும்
தடுமாறி நிற்கிறேன்


அகிலா

எழுதியவர் : அகிலா (9-May-19, 2:53 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : oru mathuku theneer
பார்வை : 108

மேலே