உனக்காக காத்திருக்க மாட்டேன் நான் 555

நிலாப்பெண்ணே...


தினமும் என்னை உன்

ஓரப்பார்வையில் தீண்டி செல்கிறாய்...


சில நாட்களில் என்னை

பார்க்காமலும் செல்கிறாய்...


அப்போதெல்லாம்
என்
கண்களும் ஈரமாக...


நீ கோவப்பார்வை

வீசினாலும் சுகம்தான்...


நீ என்னை
பார்க்காமல்
செல்வதற்கு...


பார்வையை என்
மீது
வீசி செல்கிறாயே...


இதுநாள்வரை
உனக்காக
காத்திருந்தேன்...


இனியும் காத்திருக்க

போவதில்லை நான் உனக்காக...


நேரில் உனக்காக மணித்துளிகள்

பல காத்திருப்பதைவிட...


நினைத்தபோதெல்லாம்

அரை நொடியிலே வந்துவிடுகிறாய்...


என் நினைவுகளில்...


இனி நான்

இழக்க போவதில்லை...


என் தூக்கத்தையும்

உன் நினைவுகளையும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-May-19, 8:08 pm)
பார்வை : 1445

மேலே