காற்றில் காலால் நடக்க

காற்றில் காலால் நடக்க
கண்டுபிடிப்பு வேண்டும்

கடந்தகால நிகழ்வை
கொண்டு வர வேண்டும்

பைய கையை அசைத்தால்
உயரே பறக்க வேண்டும்

மேகந் தன்னில் சென்று
தாகந் தீர்க்க வேண்டும்

வெள்ளை நிறத்துக் கதிரை
வேறு நிறத்தில் மாற்ற வேண்டும்

வேண்டும் போது நாமும்
மாண்டு விட வேண்டும்

மீண்டும் மீண்டும் பிறந்து
வாழ்ந்து மகிழ வேண்டும்.
___ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (15-May-19, 7:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 88

மேலே