சொல்லடி
உன்ஆடலில் மயங்கிய
ஆதவனும்
மேல் வானத்தை
விட்டுவிட்டான்
நீயாடுவதைக் கண்டு
உன்மேல்
விழுவதை தவிர்க்க
கீழ் திசையில் இறங்கிய
அவன்
கீழ்வானத்தை சிவக்க
வைத்தான்
கீழ்வானம் சிவந்தது
வெட்கத்தாலா உன்மீது
கோபத்தாலா சொல்லடி
ஆடல் அழகியே

