__சிறகை விரிப்பாயே

ஏழையாக பிறந்தாலும்
__ஏங்கி வாழாதே
சோதனைகளை கடந்து ___வேதனையை கழிக்கவே
தினசரி வாழ்க்கையும்
___திசையோடு நகரும்
கனவுகளை மறைத்து
__கருகி போகாதே
பணம் உள்ளவனுடன்
__படருமே ஆதிக்கவெறி
சிறகுள்ள உன்கரங்களை
___சிதறடிக்க பார்க்குமே
சிந்தனை கொண்டே
__சிறகை விரிப்பாயே
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (26-May-19, 10:35 am)
பார்வை : 138

மேலே