ஆழ்மனதின் அட்டூழியங்கள்

ஆழ்மனதின் அட்டூழியங்கள்!!
இயக்குனர் காணா கதாபாத்திரம் நீ
விடிந்ததும் மறந்து போகும் கனவு நீ
தமிழ் ராக்கர்ஸ் களவாடா கதை நீ
இசையில்லா இம்சை நீ
கவியில் இல்லா கற்பனை நீ
கட்டுப்பாடில்லா கடல் நீ
உடலை உறங்க வைத்து
ஊர் சுற்றும் - இரவுக்கன்னி நீ
மெய்யில்லா உயிரோடு
உறவாடும் உள்ளம் நீ !!

எழுதியவர் : மொழிலினி (Babeetha) (26-May-19, 9:46 pm)
சேர்த்தது : Babeetha- மொழிலினி
பார்வை : 335

மேலே