அவள் மனதை தெரியும் எனக்கு

* இதயத்தின் ஈர நினைவுகளோடு *

அன்றைய தருணம் தான் என் வாழ்வின் கடைசி தருணம்..
என் நினைவுகள் மண்ணோடு புதைந்த தினம்..

ஊரே அவளை புதுமையாய் பார்க்க, நானும் அவளை பார்த்தேன்..
அவளை தெரியும் என் மனதிற்கு..

செந்தணல் எரிமலை குழம்பு கொண்டு வரையபட்டது போல், அவள் கைகளில் மருதாணி அச்சு..
அது அவளின் விருப்பமான ஒன்று..
அவளை தெரியும் என் மனதிற்கு..

மெல்லிய அத்தர் வாசனையில் முகம் சுழிக்கிறாள்..
அது அவளுக்கு அறவே புடிக்காது..
அவளை தெரியும் என் மனதிற்கு...

சுற்றி அழகுக்காக வைத்திருக்கும் ரோஜா செடி இதழ்களை ஆசையாய் வருடுகிறாள்..

அது அவளுக்கு ரொம்ப புடிக்கும்...

அவளை தெரியும் என் மனதிற்கு...

அவள் அணிந்திருந்த மெல்லிய இளஞ்சிவப்பு நிற பட்டாடையை பார்த்தேன்..

அது நிச்சயம் அவளின் தேர்வாக தான் இருக்கும்...

அவளை தெரியும் என் மனதிற்கு...

நான் அவளையே பார்த்து கண்ணீருடன் இந்த தருணங்களை என் மனதோடு வருடிய பொழுதில்,

எதார்த்தமாக அவளின் பார்வை என் மேல் பதிய, அவள் விழிகள் சுரக்கும் நீர்த்தளிகளை...

விழியில் விழுந்த தூசை துடைப்பதை போல துடைத்து விட்டு செல்கிறாள்...
எனக்கு தெரியும் அவள் மனதை...

.... ரூபன் புவியன்.......

எழுதியவர் : ரூபன் புவியன் (28-May-19, 6:17 am)
சேர்த்தது : Ruban puviyan
பார்வை : 408

மேலே