காதல் போராட்டம்

அன்பே
சில நாள்முதலாய்
உன்னால் சிதைந்த நாள்முதலாய்
உன்னில் கலந்த நாள்முதலாய்
உன்னை காணும்போது கடல் சீற்றம்
உன்னை காணத போது
நிலநடுக்கமென -- நிருபிக்க முடியாத
நீண்ட வேதனையில் நான்
நிம்மதியின்றி அலைகிறேன்!!

நீ துடைப்பாயென்று
விரும்பி வரும் கண்ணீர்!
நீ வெறுப்பாயென்று
ஒதுங்கி நிற்கும் காயம்!!
நிருத்த முடியாமலும்
தடுக்க முடியாமலும்
தனித்து வாடுகிறேன்!!!

முட்டி பார்க்கிறேன்
மோதி பார்க்கிறேன்
காதலுடன் உன்னை அனைக்க....
விட்டு பார்க்கிறாய்
விரட்டி பார்க்கிறாய்
என்னை வெறுக்க...
எட்டி போவேனா
ஏமாற்றம் அடைவேனா
என்னவளே உன்னை அடையாமல்...

நீ பார்த்துதானே
நான் பூர்த்தேன்!
பூர்த்தவன் இன்று
பூங்காற்றாய் வாசம் வீச!!
பூவே நீ புதிராய் மறைகிறாய்...
மறைய விடுவேனா
மறக்க விடுவேனா
உன் மனதில் உறங்கியதை அறியாமல்...

சொல்லாமல் சென்றாய்
கொல்லாமல் கொன்றாய்
கொஞ்சமும் யோசிக்க முடியவில்லை
நீ பிரிவாய் என்பதை!!
பிரிந்து நீ போவதும்
வருந்தி நான் சாவதும்
வாடிக்கையாகி போனதே
நம் காதல் வாழ்வில்...

நித்திரையில் பூப்பறிக்க
இரவுகள் உரிமையை கொடுத்தாலும்
உறக்கத்தை கொடுத்தாலும்
நினைவுகளில் "நீ" தீ வைக்கிறாய்!!
இளமை தான் எரிந்து விடுமா
என் கனவு தான் கலைந்துவிடுமா
கண்மணியே உன்னை காணாமல்....

நிழலுக்கு வலிக்குமென்று
நெஞ்சத்தை ஒளித்தவளே!
நிஜமே இங்கு உடையும் போதும்
நெருங்கி நீ வரமாட்டாயா...
தீ என்னை எரித்தாலும்
திங்களே மறைத்தாலும்
திரும்பி நீ பார்க்க மாட்டாயா....

அனல் மீது வாழ்ந்தவனுக்கு
அன்பு சாரலை சிதறியவளே!
சொர்கமென்பதை நான் அறிந்தாலும்
நரகத்தில் தான் என் நாட்களை
கழிக்க வேண்டுமா...

என்னடி தவறு செய்தேன்
என்னவளே -- நான்
காதலித்ததா
நீ காயப்படுத்தியதா.....

பருவத்தால் வெட்டினாய்
பாவி நெஞ்சம்
பயப்படவில்லை...

என்னை ஒழிக்க வேண்டுமென்றே
ஒவ்வொரு முறையும்
ஓரப்பார்வையை வீசினாய்!
வலிகளில் வாழ்ந்து பழகினாலும்
உன் விழிகளால் வாழ ஆசைக்கொண்டேன்...

அன்புக்கு விதை போட்டவள் நீயே
அதற்கு நீர் உற்றியவன் நானே

இதயத்தை வெறுத்தது நீயே
அதனை பொறுத்தது நானே

விலகி செல்கிறாய்
என்றுதான் பலமுறை
விட்டுவிட நினைத்தேன் -- ஆனால்
விளிம்புகளில் நின்று
"நீ" திரும்பி பார்க்க!!
விட்டுவிட நினைத்தவன்
விடுவதற்கும்
தொடுவதற்கும்
நிலையான விடை ஒன்று கிடைக்காமல்
நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன்!!!

வார்த்தைகள் என்ன
உனக்கு மட்டும்தான்
சொந்தமா -- அதை ஏன்
வாய்க்குள் பூட்டி வைக்கிறாய்...

விருப்பம் என்ன
உனக்கு மட்டும் தான் பந்தமா -- அதை
நெஞ்சோரத்தில் மூடி மறைக்கிறாய்...

உடல்கள்
சேர்ந்துவிடுமென்றா
ஓடி ஒளிகிறாய் -- உயிர்
என்னோடு சேர்ந்து எத்தனையோ
நாட்கள் ஆனது! அதை அறியாமலே
அறியாமையை நீ அடைக்காக்கிறாய்!!!

உணர்வுகள் எல்லாம்
உனக்கென்று ஆனபிறகு
உன் ஊடல்கள் வந்து
என்னை என்னடி செய்துவிடும்...

பேச மாட்டேன் என்னு
என்னை கொன்று செல்பவளே!
நீ கொஞ்சி பேசிய
அந்த வார்த்தைகளில் சிக்கிதானடி
நான் இருண்டு கிடக்கிறேன்...

இன்னும் என்னடி வேண்டும்
என்னுயிரே!
இறுதிநாளை எதிர்ப்பார்த்து
ஒய்வெடுக்க இந்த இதயமே
தயாராகிவிட்டது -- இப்போதும் நீ
சம்மதிக்காமல் இருப்பது சரியா...

கத்தி ஏந்தி
போர்க்களத்தில்
போரிட்டிருந்தால் கூட -- காயம் வாங்கி
உயிர் வாழ்ந்திருப்பேன்!! ஆனால்
இந்த காதலை வாங்கி
உன் கண்களோடு போரிட்டதாலே
உயிரை துறந்தும்
உடல் வாடி வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-Jun-19, 7:38 pm)
Tanglish : kaadhal porattam
பார்வை : 1119

மேலே