அவளது காதல் -- பகுதி - 4

பிரவீன் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்த வீட்டில்...

"அம்மா....இந்த அப்பா திருந்தவே மாட்டாரா, சுத்தமா எனக்கு பிடிக்கலம்மா," தனது தாயிடம் நடந்ததை கூறி கடிந்துகொண்டாள் விஜி.

"என்ன விஜி பண்றது, இந்த மனுஷன் இப்டி பண்றது எனக்கு கூடத்தான் பிடிக்கல, அதுமட்டுமில்ல, வீட்ல 2 வயசுக்கு வந்த பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு தினமும் குடிச்சுட்டு வந்தா ரோட்ல எல்லாரும் என்ன நெனப்பாங்க. எப்பதான் திருந்துவாரோ" அலுத்துக்கொண்டாள் விஜியின் தாய் புவனா.

இங்கே இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்க முபாரக்கும் ப்ரவீனும் கடலூரை நெருங்கி இருந்தனர்.

இருவரின் வண்டிகளும் மஞ்சை மைதானத்திற்குள் பிரவேசித்தன. அங்கே கிரிக்கெட் வலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு குழு இவர்களை பார்த்ததும் பயிற்சியை நிறுத்திவிட்டு இவர்களை நோக்கி வந்தனர்.

"ஹாய் டா, ஹாலிடேய்ஸ்ல கூட ப்ராக்டீஸுக்கு ஒழுங்கா வரமாட்டீங்களாடா நீங்க" என்றபடி கோச் முதலில் வர, "ஹாய் டா...." என்றபடி அனைத்து அணி வீரர்களும் வந்தனர்.

"அது இல்ல சார், முபாரக் லவ் பண்ற பொண்ண அவங்க அப்பா பாக்கணும் னு சொன்னாரு, அதான் விழுப்புரம் போய் கூட்டிட்டு வந்தோம். சாரி சார், அதுமட்டும் இல்லாம எங்களுக்கு எல்லாம் பிராக்டீஸ் வேணுமா சார்? " நையாண்டியாய் கேட்டான் பிரவீன்.

"பேசுவ டா பேசுவ.....ஸ்டார் பிளேயர் இல்ல, அதான் இந்த வாய். உன் ஓவர் காண்பிடண்ஸ் தான் உனக்கு ஒருநாள் எதிரி ஆகப்போகுது பாரு" என்றார் கோச்.

"சார், அது வரும்போது பாக்கலாம் சார். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க," என்று கூறிவிட்டு மற்ற அணியின் உறுப்பினர்களுடன் பேசத்தொடங்கினான் பிரவீன்.

"டேய், முபாரக்.....சைலெண்டா வாப்பா சொன்னாரு வாப்பா சொன்னாருன்னு சொல்லி ஒரு பாப்பாவை புடிச்சுட்ட. என்ன நர்கீஸ், பையன் ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே. உனக்கு செட் ஆவானா?" என்றான் ரியாஸ்.

"என்ன அப்டி சொல்லிட்டிங்க, ரியாஸ், அதெல்லாம் ஆகணும்...அது அவன் விதி" என்றாள் நர்கீஸ்.

"சரி தான், புளியன்கொம்பா தான் புடிச்சிருக்கான்" என்றான் விஜய்.

"ஆமாம் விஜய், முபாரக் வைப் ஆகப்போறவள், அவனோட குணத்துல பாதியாவது இருந்தா தானே பெட்டர் ஆப் ஆவேன்" என்றாள் நர்கீஸ்.

"எங்க எல்லாரோட பேரும் தெரியுமா?" என்றான் ரகு.

"ஓ, இவனுக்கு இதான வேலையே...என்னை பாக்க வருவான். நானும் ஆசையா என் பிரண்ட்ஸ்கிட்ட இன்ட்ரோ பண்ண கூட்டிட்டு போவேன்..என்னை பத்தி பேசாம உங்க புராணம் தான் படிப்பான். இதுல உங்க போட்டோ வேற காட்டுவான்." அலுத்துக்கொண்டாள் நர்கீஸ்.

"மச்சி.....அவ்ளோ பாசமா டா எங்கமேல" என்றான் வெற்றி.

"பாசமா....நம்ம எல்லாரபத்தியும் என்னென்ன சொல்லிருக்கானோ" என்றான் லெனின்.

"ஆமாம் டா....சரியாய் சொன்ன" என்றான் கதிர்.

"டேய் டேய் நாய்ங்களா, ஒரு பொண்ணு சொன்னா உடனே நம்பிடுவீங்களா, நான் உங்க பிரண்டு டா." என்றான் முபாரக்.

"அதுனாலதான் தம்பி பயமே....என்றான் ஹரி.

"சரி சரி மச்சானை டென்ஷன் ஆக்காதிங்க, சொல்லுங்க நர்கீஸ், உங்களப்பத்தி" என்றான் விஜய்.

"இருங்க....பர்ஸ்ட் உங்களப்பத்தி சொல்லிடறேன். கரெக்ட்டான்னு சொல்லுங்க" என்றபடியே ஒவ்வொருவரைப்பற்றி சொன்னாள்.

"உங்க நேம் விஜய், இது உங்க தம்பி கார்த்திக், ரெண்டு பேரும் உங்க டீம் கு விளையாடுறீங்க. நீங்க பெரியார் ஆர்ட்ஸ் காலேஜில அக்கவுன்ட்ஸ்ல இருக்கீங்க. உங்களுக்கு அம்மா மட்டும் தான். நீங்க தேவனாம்பட்டினம் மெயின் ரோட்ல இருக்கீங்க. உங்க தம்பி கார்த்திக் காலேஜ் பர்ஸ்ட் இயர், கரெக்ட்டா விஜய்?" என்றாள் நர்கீஸ். "ஹ்ம்ம்....அப்புறம்?" என்றான் விஜய்.

"நீங்க ரியாஸ், முபாரக்கோட கிளாஸ்மேட். உங்க வீடு கூத்தப்பாக்கம் ல இருக்கு, உங்களுக்கு அப்பா அம்மா ஒரு தம்பி இருக்காரு, அந்த தம்பி தான் ஷாகுல். இதோ இவர் ஷாகுல்....உங்க பிரதர். நீங்க மதினா பஸ் ஓனர். கரெக்டா ரியாஸ்?" என்றாள் நர்கீஸ்.

"அட.....பார்றா....அப்புறம்?" என்றான் ரியாஸ்.

"இது ரகு, உங்க டீம்லயே சீனியர், ஸ்டில் கல்யாணம் ஆகல, பேரன்ட்ஸ் இல்ல, இவருக்கு 2 சிஸ்டேர்ஸ் இருக்காங்க, அக்ஷயா அண்ட் அபிநயா. இவரு முபாரக் சங்கு பேக்டரி ல சூப்பர்விஸரா இருக்காரு. உங்க வீடு கம்மியம்பேட்டை ல இருக்கு. ஆம் ஐ கரெக்ட் ரகு?" என்றாள் நர்கீஸ்.

"அடடட.....மச்சான் செமயா மனசுல பதியரபோல சொல்லிருக்கான் டா நம்மள பத்தி. அப்புறம்...மேல சொல்லுங்க" என்றான் ரகு.

"இது லெனின், இவரு எம்.என்.டி.என். நடத்துற ஆஸ்ரமத்துல வளர்ந்த பெற்றோரால் கைவிடப்பட்ட நபர். 18 நாள் குழந்தையா புதூர் மலை ல முள்ளுக்காடுக்குள்ள இருந்து எடுத்தாங்க......சாரி லெனின்...."என்றாள் நர்கீஸ்.

"பரவால்ல....உண்மைய தான சொன்னீங்க. சொல்லுங்க" என்றான் லெனின்.

"உங்க ஆஸ்ரமத்துல படிக்க வெச்சு உங்கள வேலைக்கு போக சொன்னாங்க. பட், நீங்க இந்த கிரிக்கெட் விளையாட்டு, மியூசிக் இன்ஸ்டூமென்ட் கிளாஸ் நடத்தி உங்க வருமானத்தை உங்க ஆஸ்ரம்க்கே குடுக்கறீங்க. அங்க இன்னும் சேவை பண்றீங்க." என்றாள் நர்கீஸ்.

"அடடட....இவ்ளோ தெரியுமா....அப்புறம்" என்றான் லெனின்.

"இது வெற்றி அண்ட் கதிர், ஒண்ணா மெக்கானிக் ஷாப் வெச்சிருக்காங்க. இவங்களும் ஆர்பன்ஸ் தான். முபாரக் இவங்களுக்கு கடை வெச்சு குடுத்துருக்கான். கடலூர்ல பெஸ்ட் அண்ட் சீப் டூ வீலர் மெக்கானிக் இவங்க தான், இவங்க வீடு அண்ட் மெக்கானிக் ஷாப் எல்லாமே ஒண்ணு தான் அது நியூ சினிமா இறக்கத்துல தரைக்காத்த காளியம்மன் கோயில் பக்கத்துல இருக்கு. கரெக்டா பிரண்ட்ஸ்?" என்றாள் நர்கீஸ்.

"அப்டி போடு, நீங்க ஒரு நடமாடும் மெமரி கார்டு. மேல சொல்லுங்க" என்றான் கதிர்.

"இது ஹரி, சன்னதி தெருல இருக்காரு, பெரிய கம்ப்யூட்டர் ப்ரொவ்சிங் சென்டர் வெச்சு நடத்தறாரு கரெக்டா" என்றாள் நர்கீஸ்.

"எல்லாமே டாப் கரெக்ட் நர்கீஸ். நீங்க பெரிய ஆளு தான்" என்றான் ஹரி.

"இது பிரவீன், உங்க டீம் கேப்டன். முபாரக் விட்டுக்கொடுத்த போஸ்ட். ஏன்னா முபாரக்க விட பிரவீன் விளையாட்டுல விகரசா இருக்கான். அம்மா இருக்காங்க, இது அவன் தங்கை பிரதீபா, பிரவீன் இந்த இயர் ஜூன் ல தான் காலேஜ் முடிச்சான். முடிச்சுட்டு இப்போ தான் 6 மாசமா சிப்காட்ல நாகார்ஜூனா ஆயில் கார்பொரேஷன் ல கெமிஸ்ட்டா இருக்கான். பிரதீபா ப்ளஸ் ஒன் படிக்கிறா. இவங்க செயின்ட் ஜோசப் காலேஜ் பக்கத்துல இருக்காங்க. அண்ட் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், இது முபாரக், ஒண்ணா நம்பர் கேடி. ....ஜஸ்ட் ஜோக். இது முபாரக், கடலூர் ஓ.டீ.அப்பா பெரிய சங்கு பேக்டரி வெச்சுருக்கார், கடல் ல இருந்து எடுக்கும் சங்குகள் போலிஷ் பண்ணி பெயிண்ட் பண்ணி பல பாரின் கண்ட்ரீஸ்க்கு எக்ஸ்போர்ட் பண்ராங்க. இப்போ முபாரக் அந்த பிசுனஸ்ஸ அப்பா கூட சேர்ந்து பாத்துக்கறான். கரெக்ட்?" என்றாள் நர்கீஸ்,

"யம்மா தாயே.....மணி ஆகுது, வா வீட்டுக்கு போகலாம்" என்றான் முபாரக்.

"ஒன் மினிட், கடைசியா, நான் நர்கீஸ், ஊரு திருச்சி, இங்க விழுப்புரம் ல ஒரு நூர் ஜிவெல்ஸ் ஓனர் அபூபெக்கர் கு ஒரே பொண்ணு. நல்லா படிக்கமாட்டேன், ஜஸ்ட் 91 பர்சண்ட்டேஜ் இன் இன்பார்மஷன் டெக்னாலஜி. அண்ணா யூனிவர்சிட்டி." நக்கலாக நாக்கை கடித்தாள் நர்கீஸ்.

"ஓகே மச்சீஸ், இந்தாங்கடா, கேஷ், என்ஜாய் யுவர்செல்ப். நான் கிளம்பறேன்" என்றபடி முபாரக் நர்கீஸை அழைத்துக்கொண்டு கிளம்ப, ப்ரவீனும் தன் தங்கையை அழைத்துக்கொண்டு வீடு சென்றான்.

நர்கீஸ்.....முபாரக்கின் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். புரிந்துகொள்ளுதல், பக்குவமான மனப்பாங்கு என்று இந்த சிறிய வயதில் நிரம்பிய பெண் முபாரக்கின் வாழ்க்கையில் மனைவியாக வருவது அவன் செய்த பாக்கியம்.
"அம்மா, சாரி, கொஞ்சம் லேட் ஆயிருச்சு, "என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான் பிரவீன்.

"டேய், உன் கம்பெனி ல இருந்து லேண்ட் லைனுக்கு போன் வந்துச்சு. ஏதோ மெயிண்டனென்ஸ் வேலை போட்ருக்காங்களாம், அதனால சண்டே நீ டூட்டிக்கு போகணுமாம், பர்ஸ்ட் ஷிப்ட். உனக்கு போன் பண்ணிருக்காங்க, நாட் ரீச்சபிள் னு வந்துச்சாம்" என்றாள் பிரவீனின் தாய்.

"ஏம்மா அட்டென்ட் பண்ணின, ஆல்ரெடி எனக்கு தெரிஞ்சு தான் நான் அட்டென்ட் பண்ணல." முறுக்கிக்கொண்டான் பிரவீன்.

"டேய், எனக்கு எப்பிடிடா தெரியும், நீ சொன்னியா?" என்றாள் பிரவீனின் தாய் அமுதா.

"உனக்கு தான் போன் ல காலர் ஐடி வெச்சுருக்கேன் இல்ல, நம்பரை பாக்கவேண்டிது தான?, போம்மா, அன்னிக்கு மேட்ச் இருக்கு." என்றான் பிரவீன்.

"டேய், மேட்ச் மேட்ச் னு வேலைய காப்பாத்திக்க விட்றாத. உனக்கு ஒரு தங்கை இருக்கா, ஞாபகம் வெச்சுக்கோ." என்றாள் அமுதா.

"அம்மா, சும்மா இதே புராணம் படிக்காத, நான் முபாரக் வீட்டுக்கு போகணும், சூடா டி குடு" என்றான் பிரவீன்.

"டேய், அப்டியே என்னை ஸ்டேடியத்துல விட்று டா, வீட்ல யாரும் இல்லாதனால காலைல நான் வாக்கிங் போகல." என்றாள் அமுதா.

"அம்மா, பலமுறை சொல்லிருக்கேன், வாக்கிங் மிஸ் பண்ணாத, சுகர் பீப்பீ ஏறிடும் னு" கேக்க மாட்டியா நீ? சரி இன்னிக்கு ஈவினிங் நான் ஸ்டேடியம் ல விடறேன், நாளைல இருந்து கண்டிப்பா மார்னிங்க்ல போய்டணும் புரியுதா?" என்றபடி அமுதா கொடுத்த டீயை ருசித்தான்.

சற்றுநேரத்தில் அமுதாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான் பிரவீன்.

"ஏய் ப்ரத்தி, வீட்டை பூட்டிட்டு உள்ளேயே இரு, வேணும்னா சரண்யாவை கூப்டுக்கோ, அம்மா கொஞ்சநேரத்துல வந்துருவாங்க. நான் தான் வர லேட் ஆகும்" என்றான் பிரவீன்.

"சரி, நான் பார்த்துக்கறேன்" என்றாள் பிரதீபா.

ஸ்டேடியத்தில் அமுதாவை இறக்கிவிட்டுவிட்டு கடலூர் முதுநகர் நோக்கி வண்டியை செலுத்தினான்.

"வாடா, பிரவீன், என்னடா இது, நீ கூட என்கிட்டே முபாரக் லவ் பண்ரான் ன்னு சொல்லவே இல்ல இல்ல?" என்றார் முபாரக்கின் தந்தை.

"இல்ல வாப்பா, அப்டி இல்ல, நீங்க கோவப்பட்டிருவீங்களோன்னு தான்...." பிரவீன் முடிப்பதற்குள், "நீயும் சொல்லல அவனும் சொல்லல, அதான் கோவமே தவிர முபாரக் லவ் பண்றதுல கோவமே இல்ல, அதும் இல்லாம, நர்கீஸ் ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா, மரியாதையான பொண்ணு, எல்லாத்துக்கும் மேல நர்கீசின் அப்பா, என் வைப்போட சித்தப்பாக்கு க்ளோஸ் பிரண்டு. நல்ல டைப் அவரு" என்றார் முபாரக்கின் தந்தை.

"சரி வாப்பா, எங்க அவன், " என்று கேட்டான் பிரவீன்.

"நம்ம பேக்டரிய சுத்திக்காட்ட கூட்டிட்டு போயிருக்கான்." என்றார் முபாரக்கின் தந்தை.

சற்றுநேரத்தில் இருவரும் வந்துவிட, "டேய் மணி ஆயிருச்சு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா, ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணனும், சோ, நீ நர்கீச விழுப்புரத்துல விட்டுட்டு வரியா?" என்றான் முபாரக்.

"டேய், லூசா டா நீ, என்னால முடியாது, வேணும்னா கூட வரேன், நான் கூட்டிட்டு போகமாட்டேன், என்ன வாப்பா இவன், அறிவில்லாம பேசறான்" என்றான் பிரவீன்.

"இல்ல பிரவீன், அவன் சொல்றது சரி தான் ரொம்ப முக்கியமான வேலை தான் அது, நீ வண்டி ல போகவேணாம், நம்ம கார் எடுத்துட்டு போ, 2526 - சாண்ட்ரோ வ." என்றார் முபாரக்கின் தந்தை.

"வாப்பா.....நீங்களுமா......சரி கூட்டிட்டு போறேன், " என்றான் பிரவீன்.

"ரொம்ப அலுத்துக்கறியே, போ டா, நடிக்காத" என்றான் முபாரக்.

"சரி டா, நீ ஒரு விஷயம் பண்ணு, கொட்டேஷன் முடிச்சுட்டு லாயர் ஆபீஸ் போவ இல்ல, அப்டியே என் அம்மாவை ஸ்டேடியம் ல இருந்து எங்க வீட்ல டிராப் பண்ணிடு." என்றான் பிரவீன்.

"சரி டா, நான் பாத்துக்கறேன், நீ கெளம்பு" என்றான் முபாரக்.

கார் விழுப்புரத்தை நோக்கி பயணப்பட்டது....

"அம்மா, நீ ஸ்டேடியம் வெளில நம்ம அருண் ஐஸ் கிரீம் கடைல வெயிட் பண்ணு, முபாரக் வருவான், உன்னை வீட்ல டிராப் பண்ணிருவான்," கால் செய்து தனது தாய்க்கு தெரிவித்தான் பிரவீன்.

"பிரவீன், எதுக்கு முபாரக் என்னை கூட்டிட்டு போய் விழுப்புரத்துல விடுன்னு சொன்னதுக்கு முடியாதுன்னு கோவப்பட்ட" என்று கேட்டாள் நர்கீஸ்.

"அது இல்ல நர்கீஸ், அவன் கொண்டு விடறது தான் சரி, அதுல நெறய ரீசன் இருக்கு, விடு, " என்றான் பிரவீன்.

"சோ, இப்பவும் நீ முழு மனசு இல்லாம தான் என்னை கொண்டுவிட சம்மதிச்சுருக்கியா?" என்றாள் நர்கீஸ்.

"என்ன இருந்தாலும் முபாரக் பண்ணது தப்பு" என்றான் பிரவீன்.

"பிரவீன், அவன்தான் ஏதோ முக்கியமான வேலை னு சொல்றான் இல்ல, வி ஹாவ் டு அண்டர்ஸ்டேன்ட் தட்" என்றாள் நர்கீஸ்.

"உன்னை விட என்ன பெரிய மயிறு வேலை" கோவப்பட்டான் பிரவீன்.

"பிரவீன், இது தேவை இல்லாத கோவம், நானே கோவப்படல, நீ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகற. முபாரக் பத்தி எனக்கு தெரியும், அவன் என்னை இப்டி உன்கூட அனுப்பிட்டு மனசுல எவ்ளோ பீல் பண்ணுவான் தெரியுமா, ஒரு காதலி தன்னை காதலிப்பவனை எவ்ளோ புரிஞ்சுக்கறாளோ அவ்ளோ பாசம் அன்யுன்யம் அதிகமாகும், நீ ஒண்ணும் கோவப்பட வேணாம். ஐ ஆம் ஆல்ரைட். இதைக்கூட நான் புரிஞ்சுக்கலன்னா நான் முபாரக் வைப்ப்னு...சாரி வைப் ஆகப்போறவள்ன்னு சொல்லிக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல" என்றாள் நர்கீஸ்.

ஒரு நிமிடம் ஷாக் ஆன பிரவீன், அந்த சென்டிமென்டல் உரையாடலை முடிக்க, "நர்கீஸ், நீ நல்லவளா....கெட்டவளா....." என்ற நாயகன் டயலாக்கை கூற, சிரிப்பொலியுடன் கார் விழுப்புரத்தை நோக்கி சீரான வேகத்தில் நகர்ந்தது.

விழுப்புரத்தில் காந்தி சிலை நிறுத்தத்தில் நர்கீஸை இறக்கி விட்டுவிட்டு முபாரக்கிற்கு கால் செய்தான் பிரவீன். "டேய், விழுப்புரத்தில் இறக்கி விட்டுட்டேன், நீ அம்மாவை டிராப் பண்ணிட்டியா?" என்றான் பிரவீன்.

"பண்ணிட்டேன் டா, லாயர் கூட இருக்கேன், அப்பறம் கால் பண்றேன், பை" என்றான் முபாரக்.

"ஓகே டா" என்றபடி இணைப்பை துண்டித்துவிட்டு விஜய்க்கு கால் செய்தான் பிரவீன்.

"விஜய், இன்னிக்கு நான் ராகவேந்திரா ஸ்னாக்ஸ் கு வரல, ஸ்டில் ஐ ஆம் இன் விழுப்புரம், லேட்டா ஆகும் போலருக்கு" என்றான் பிரவீன்.

"டேய்...என்னடா, நீயும் இல்ல முபாரக்கும் இல்ல, " என்றான் விஜய்.

"அதான் நீ, ரியாஸ், ரகு, லெனின் எல்லாரும் இருக்கீங்களே டா." என்றான் பிரவீன்.

"இருந்தாலும்....சரி விடு நோ இஸ்ஸுஸ்" என்று கூறி கட் செய்தான் விஜய்.

கார் மீண்டும் கடலூர் நோக்கி பயணப்பட்டது. கோலியனூர் கூட்ரோட்டில் காலையில் சந்தித்த அந்தப்பெண் நின்றுருந்தாள். பேருந்து நிறுத்தம் ஆதலால் ஏதோ பேருந்துக்கு காத்திருப்பதாக உணர்ந்தான் பிரவீன்.

காரை நிறுத்திவிட்டு "என்ன, மேடம்.....இங்க இருக்கீங்க, வைட்டிங் பார் பஸ் ஆஹ்?" என்றான் பிரவீன்.

"சாரி,ஐ டோன்ட் கெட் யு, பட் யாரு நீங்க?" என்றாள் விஜி.

"ம்ம்ம்ம், கேப்பீங்களே நல்லா? காலைல டிக்கெட் எடுத்துட்டு வந்து கொடுத்தேனே....மறந்துட்டிங்களா?" என்றான் பிரவீன்.

"ஓஹ் நீங்களா, ஆமாம், பஸ் கு வெயிட் பண்றேன், கடலூர் போகணும்....ரொம்ப நேரமா நிக்கறோம், ஆல்ரெடி எம்.கே.எஸ். புல்லா வந்துச்சு, சோ அடுத்த பஸ்க்கு வெய்ட் பண்றோம்." என்றாள் விஜி.

"வெய்ட் பண்றோம் ஆஹ்? யாராரு?" என்றான் பிரவீன்.

"நான், என் அம்மா, என் தங்கை ரம்யா" என்றாள் விஜி.

"அப்டியா...வாங்க நானும் கடலூர் தான் போறேன். உக்காருங்க" என்றபடி கார் கதவை திறந்துவிட்டான் பிரவீன்.

"இல்ல, பரவால்ல, பஸ் இப்போ வந்துரும். உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றாள் விஜி.

"இதுல என்னங்க சிரமம், கார் கடலூர் போகுது. இடம் இருக்கு, வாங்க." என்றான் பிரவீன்.

"இல்ல, பரவால்ல, வேணாம்" என்றாள் விஜி.

"அய்யய்ய...சொன்னா கேக்க மாட்டிங்களா" என்றபடி காரை விட்டு இறங்கி விஜியின் தாய் புவனாவின் காலடியில் இருந்த அவர்களது லக்கேஜை எடுத்து காரில் வைத்துவிட்டு புவனாவை "ஆன்டி, நீங்க வண்டியில ஏறி உக்காருங்க," என்றான் பிரவீன்.

வேறு வழி இல்லாமல் காரில் ஏறிக்கொண்டனர் மூவரும்.

"ஹலோ, எதுக்கு 3 பேர் பேக் சீட்ல கஷ்டப்பட்டு உக்காந்திருக்கிங்க, யாரவது முன்னால வந்து உக்காரலாம் இல்ல?" என்றான் பிரவீன்.

"சரி, நான் முன்னாடி போறேன்" என்றபடி எழுந்தாள் விஜியின் தங்கை ரம்யா.

"இல்ல ரம்மி, நான் போறேன்" என்றபடி விஜி சென்று முன்னால் அமர்ந்தாள்.

கார் புறப்பட்டது.

எழுதியவர் : பிரவீன் (3-Jun-19, 5:35 pm)
சேர்த்தது : பிரவீன்
பார்வை : 446

மேலே