புதிய உறவு---தோழனாய் வந்த அண்ணனின் காதல் வருகையால்
சொந்தமில்லா அண்ணனாய் வந்தாய்---உன்னை
சொந்தமாக்க ஒரு காதலும் வந்தது,
பாசமான வார்த்தைகள் இன்று
மெழுகாய் கரைந்துவிட்டதே...
சோகமுற்று வந்த என்கண்ணீரை,
துடைக்கும் அந்த கைகள்
காதலியின் கரங்களில் சிக்கிக்கொண்டதே!
தமக்குள் காதல் வந்ததும்
தங்கையை மறந்து விட்டாயா?

