என்னை நாய்டர் ஆக்கிட்டானே

தனியார் மருத்துமனை. கிராமத்து நடுவயதினர் ஒருவர்கிறார்.
@@@@@@@@@@####
ஏனுங்க நேத்து பெரிய டாக்டரப்
(தலைமை மருத்துவர்) பாக்க வந்தேனுங்க. இன்னிக்கு பத்து மணிக்கு வரச்சொன்னீங்க. அதான் கரக்கிட்டா (சரியான நேரத்துக்கு) வந்துட்டனுங்க.
@@@@@
சரி, சரி. அங்க உட்காரு. உள்ள ஒருத்தரு போயிருக்காரு. அவர் வந்ததும் நீ போகலாம்.
@@@@@
(ஐந்து நிமிடம் கழித்து)
ஏனுங்க உள்ள போனவரு வந்துட்டாருங்க.
@@@@#
சரி, நீ போய்யா.
(மருத்துவரின் அறையில் நுழையும் போதே) குட்டு மார்னிங்குங்க டாக்குடர்ரு (dogtor).
@@#####
உன்னை யாருய்யா உள்ளவிட்டது. போய்யா வெளில. டேய் கணேசா, உள்ள வாடா. ( கணேசன் உள்ளே வந்ததும்). இந்த பட்டிக்காட்டன கழுத்துப் பிடிச்சு வெளியிலே தள்ளாடா.
@####
வெளிநாடு எல்லாம் போயி பல பட்டங்கள வாங்கின என்னை 'நாய்ட்டர்' ஆக்கிட்டானே.
@@#@@
என்னய்யா சொல்லறீங்க.. படிக்காத இந்த கைநாட்டுப் பய என்ன dogtorruன்னு சொல்லிட்டான்டா கணேசா.
@@@@@
ஏனுங்க டாக்குடர்ரு (dogtor) உங்களுக்கு இங்கிலீசுல வணக்கம் சொல்லி உங்கள டாக்குடர்ருன்னு (dogtorru) சொன்னது தப்புங்களா.
@@@@@@
டேய் கணேசா, இந்த ஆள தெருவில தூக்கிவீசுடா. என்னை திரும்பத்திரும்ப 'நாய்ட்டர்ரு', 'நாய்ட்டர்ரு' (dogtorru)னு சொல்லிக் கேவலப்படுத்தறான்டா.
@#####
போய்யா வெளில (கிராமத்து ஆசாமியை வெளில தள்ளிட்டு போகிறார் மருத்துவரின் உதவியாளர். அவர்கள் போனபின்பு)
#########
என்னை 'நாய்ட்டர்ரு' ஆக்கிட்டானே. இன்னிக்கு காலைல யாரு மொகத்தில முழிச்சரனோ( என்று கூறி தலையில் அடித்துக்கொள்கிறார்)

எழுதியவர் : மலர் (9-Jun-19, 9:58 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 53

சிறந்த நகைச்சுவைகள்

மேலே