சொக்கர்

அப்பா, எம் பேர்ல 'ர்' சேத்து அந்த மாற்றத்தைச் சட்டப்பூர்வமாக்குங்க அப்பா.
ஏன்டா மகனே, உம் பேருக்கு என்னடா கொறச்சல்? தாத்தா ஊரிலேயே பெரிய மனுசர். வள்ளல்னு பேரு வாங்கினவரு. அவுரு பேரத்தாம்ப்பா உனக்கு வச்சிருக்கோம்.
@@@@@
மரியாதை இல்லாத பேருப்பா.
@@@@@
என்னடா சொல்லற?
@@@@@
வடநாட்டில உள்ள பிரபலங்க அவுங்க பேருகூட மரியாதையைக் குறிக்கும் 'ர்' ஐ அவுங்க பேருகூடச் சேத்துக்காராங்க. 'டெண்டுல்கன்' பேரு இருந்த மரியாதை இருக்காதுன்னு 'டெண்டுல்கர்'னு பேரு வச்சிருக்காங்க. வெளிநாட்டில டென்னிஸ் விளையாட்டு வீரர் 'ஃபெடரன்'ன்னு பேரு வச்சா மரியாதைக் குறைவாக இருக்கும்னு அவரோட பெற்றோர் அவுருக்கு 'ஃபெடரர்'ன்னு பேரு வச்சிருக்காங்க. நான் மட்டும் ஏம்ப்பா மரியாதை இல்லாத 'சொக்கன்'ங்கற பேரோட இருக்கணும். எம் பேரை 'சொக்கர்'னு மாத்துங்கப்பா.
@@@#
சரிடா சொக்கா.
@@@@
சொக்காவா? சரிடா 'சொக்கர்'ன்னு சொல்லுங்கப்பா.
@@@@#
உம். சரிடா மகனே மரியாதைக்குரிய 'சொக்கர்'அவர்களே.

எழுதியவர் : மலர் (9-Jun-19, 5:34 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 47

சிறந்த நகைச்சுவைகள்

மேலே