இரட்டை வால் குருவிகள்

அதோ அதுவேதான்
ஆழி பரப்பில் ஏதொரு புள்ளியில்
ஆகாயம் தொடுவதாய் தோன்றும்
எல்லையிலா எல்கையே உன் எல்லை..
உணர்கொள் உன்னிடம் இருப்பது சிறகுகள்,
செல் செல் செல்
திசைகள் திசைகள்தான் தடுப்புகளில்லை
கிழக்கில் மறைந்து மேற்கில் முளைத்து பற..
அவையேதான் யாரும் கண்டிராத இரட்டை வால் குருவிகள்,
சேர்ந்து பற உயர பற
இதோ இதுவேதான் வந்துவிட்டாய்..
சிறகுகளின் மென்மை சிறிதும் குறையாமல் அப்படியே வந்துவிட்டாய்
என் கண்ணம்மா...

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (12-Jun-19, 2:13 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 97

மேலே