அதே வானம்தான்
இது அதே வானம்தான்------
நீலமாய் விரிந்திருக்கும் போது
அந்தியில் அழகிய ஓவியம் ஆகும் போது
வளரும் தேயும் நிலவை இரவில் கைகோர்த்து வரும் போது
முகில் சூழ்ந்து பொழியும் போது.....
ஆனால் இந்த பூமி மட்டும் அதே போல் இருந்ததில்லை
என்று தெரிகிறது
வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது !