ரேஷ் ரசவாதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேஷ் ரசவாதி
இடம்:  THOOTHUKUDI
பிறந்த தேதி :  06-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2018
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  33

என் படைப்புகள்
ரேஷ் ரசவாதி செய்திகள்
ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2019 12:46 am

பதிற்றாண்டாய் என்னுள் உறைந்தவள்
பரிமாணங்கள் பல கண்டோம் காதல் வாழ்வினில்
பழி கண்டாய், பிழை கண்டாய், அதிலும் வாழ வழி கண்டாய் காதலால்....
பழித்தாயில்லை, பிரிந்தாயில்லை, பழுதற முயன்றாய் என்னில்....
அன்று எதிர்காலம் கருதி பலர் முகங்கோண
மலர்முகமாய் எனை ஏற்றாய் தலை நிமிர்ந்தே
நோய்க்கு தாயானாய்,வாய்க்கு சேயானாய்
பாசத்தில் தாரமானாய்
சோகத்தில் தோழியானாய்
கைமாறு என்செய்வேன்??
இமைகளில் சிறைப்பிடித்து, தேவைக்கு வேர்வையாகி, பார்வைக்கு பாவலனாக,
பயத்தில் காவலனாக,
உனைத்தாங்க நானிருப்பேன்
என்னுயிர் உள்ளவரை....

மேலும்

ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 12:11 am

என்னவளைக் காண
நெடுந்தூரம் பயணித்தேன்.....
பயண முடிவில் தான் எனக்கு தெரிந்தது
என் இதய வாசலின் அளவு...
இவ்வளவு பெரியதானதோ என்று...

மேலும்

ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 12:07 am

புள்ளி இட்டு நீ போட்ட
கோலத்தினால் அழகானது வீதி...
என் இதயத்தில் நீ இட்ட புள்ளியால்
நான் அழகானது விதி....

மேலும்

ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2019 12:53 am

வண்ணமயமானது தான் வாழ்க்கை
என்றால் ......................
எனக்கு வானவில் நீயே....
மேகமாய் நான் இருக்கும் வரை....

மேலும்

ரேஷ் ரசவாதி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 2:26 am

==
காற்றுலவும் மரம்வெட்டிக் காடழித்து நாமும்
=கட்டிடங்கள் என்கின்ற கல்மரங்கள் செய்தோம்
ஊற்றுவந்து அருவியாகும் ஓடைகளுக் கெல்லாம்
=ஊறுசெய்து நீரின்றி ஊர்தவிக்க விட்டோம்
ஆற்றினடை யாளமுமே அழிவதற்கு மணலும்
=அகழ்ந்தெடுத்துச் சீரழிந்தது அவதியுற வைத்தோம்
ஈற்றினிலே காற்றில்லை என்றிங்கே மூச்சை
=இழுப்பதற்கும் வகையற்ற எழையாகிக் கொண்டோம்.
**
விஞ்ஞான அபிவிருத்தி என்கின்ற பேரில்
=வெளியேற்றும் தொழிற்சாலை விசவாயு வெல்லாம்
எஞ்ஞான்றும் இயற்கையை இரக்கமின்றிக் கொன்று
=இடர்சூழும் பேரழிவை ஏற்படுத்த நாமும்
கொஞ்சாமல் கொஞ்சுகின்றக் கொடுந்தன்மை யாலே
=குவலயத்தின் காற்றோசோன் குகைக்குள்ளே நாளை

மேலும்

மிக்க நன்றி 16-Feb-2019 2:45 am
விஞ்ஞானமும் மெய் ஞானமும் கலந்த அறிவு பூர்வமான அறிவியல் பூர்வமான வரிகளை கண்டதில் ஞான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.... வாழ்க நீவீர்... வளர்க் உம் கவித்தொண்டு... 16-Feb-2019 12:28 am
மிக்க நன்றி 15-Feb-2019 3:25 pm
அருமையான சிந்தனை ஐயா.. 15-Feb-2019 3:53 am
ரேஷ் ரசவாதி - kandhaknight அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2019 11:45 am

அடியே கண்ணழகி!
புவியீர்ப்பு விசையை எதிர்த்துப் பறக்கும் பறவை கூட உன் கண்ணின் ஈர்ப்பை தாங்காதடி.

மேலும்

புவி ஈர்ப்பு விசை போல உமது கவிதை என்னை வெகுவாக ஈர்த்தது... மிக்க நன்றி... 12-Feb-2019 11:56 pm
அனுபவம் போல 06-Feb-2019 9:40 am
ரேஷ் ரசவாதி - தமிழரசன் பாபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2019 11:22 am

ஓராயிரம் விண்மின்கள் உண்டு வானில்
அதில் ஒன்றை கொண்டு காதல் தூது செய்தால்
என்ன என்னை கண்டு கொன்றிடவா போகிறது அந்த நிலவு ...

அப்படியும் என்னை கண்டு கொண்டு
நிலவே நீ நேரில் வந்தால்
அவள் நெத்தி சுடி வாங்கி தருகிறேன் ....
உன் நெத்தியில் இட்டுக்கொள் அப்படியேனும்
அவளை மிஞ்சுகிறாயா அழகில் என்று பார்கிறேன்...

என் தேவதை வானில் வந்தால் மேகங்கள் எல்லாம் உன்னை சுற்ற மறந்து விடும்....
அவள் முன்னே சென்று வட்டமிடும்....
அவள் பின்னே அலைந்து திரிந்து காதல் மழை பொழிந்து விடும்...

அழகான பிறை ஒளியின் மொழி உன்னதென்றால்
அவள் கண்ணின் ஒளி என்ன சொல்ல...

இருள் தேச பௌர்ணமி நீ என்றால்
என் பகல் தேச சந்திரனை எ

மேலும்

இது கவிதை போலவே இல்லை ஏதோ காதல் கடிதம் எழுதியது போல இருக்கிறது. எவ்வளவு அழகாக ஒவ்வொரு வரிகளையும் எழுதி இருக்கின்றீர்...! ஒவ்வொரு வரிகளிலும் உங்களின் காதலின் பெரு மயக்கம் தெரிகின்றது. உங்களுக்கு என் காதலர் தின வாழ்த்துக்கள். 14-Feb-2019 5:15 pm
காதலர் தினத்திற்கான அழகிய விளக்கம்... சரியாக சொல்லப்பட்ட உவமைகள்..... இயற்கையோடு ஒன்றி எழுதப்பட்ட காதலின் உன்னதமான வரிகள்.... மெய் மறந்தேன்... இந்த கவிதையினை கண்டு... நன்றி தோழரே.. பா. தமிழரசன்... வளர்க உம் கவிப்பணி... 12-Feb-2019 11:54 pm
ரேஷ் ரசவாதி - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 8:11 am

வாக்கு பொய்க்காத வண்ணத் தமிழ் கவியே
எமக்கு......
வானம் தலை தட்டியது தமிழன் என்றே தலை நிமிர்ந்ததும்.....!!!!

வானமும் எமை வளரவிடாது
வஞ்சிக்கிறதோ என்று எண்ணியபடி.....

குனிந்தபடி கொஞ்சம் கேட்டோம்
குழந்தைத் தமிழாய் பூமியில் குயிலோசை......!!

இடையில் வந்த இடியோசை என
இங்கிலீசின் இரைச்சல் பிடித்துப் போக......

இதோ இயர்போனை செவியில் மாட்டி
இன்பம் இதுவேயென மயங்கி நிற்கிறோம்.....

வானம் தலை தட்டியதன்
வண்ணம் இப்போது புரிந்தது......

பாரடா அங்கே குயிலோசை உன்
பைந்தமிழ் இனிமை பயில - நீயோ

பறங்கியர் மொழியில் பாசம் வைத்து - தமிழ்
பண்பாட்டை மறந்து நிற்கிறாய்.......

சொல்லிலே

மேலும்

வாழ்த்துக்கு நன்றி தோழமையே 07-Mar-2014 4:17 pm
புரிந்ததா வித்யா இப்போது புகுந்து விட்டால் தமிழ் இடையில் புற்றீசலாய் பிற மொழி பூரிக்கும் தமிழமுதம் கூட பொல்லாத விஷமாகும் என்று....!! பனியைப் போல் குளிர்ந்த நின் பாராட்டு என் கவிப் பணியை தொடர ஊக்குவித்தது....!! நன்றி வித்யா 06-Mar-2014 6:50 pm
ரசனை என்ற துடுப்பு உதவும் வரை-கால ராஜ்யங்கள் வென்று பயணிக்கும் ரம்யக் கவி ஓடம்..... வேண்டுகிறேன் உங்கள் ரசனை மழை விளையவே தொடர்ந்து கவிப் பயிர்.... நன்றி நண்பரே 06-Mar-2014 6:46 pm
உங்கள் கவி ஓடம தமிழ் நதியில் இன்னும் வெகுதுராம் போக நான் இறைவனை வேண்டுகிறேன் 06-Mar-2014 4:36 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே