வாழ்க - வளர்க - வெல்க - செந்தமிழ்

வாக்கு பொய்க்காத வண்ணத் தமிழ் கவியே
எமக்கு......
வானம் தலை தட்டியது தமிழன் என்றே தலை நிமிர்ந்ததும்.....!!!!

வானமும் எமை வளரவிடாது
வஞ்சிக்கிறதோ என்று எண்ணியபடி.....

குனிந்தபடி கொஞ்சம் கேட்டோம்
குழந்தைத் தமிழாய் பூமியில் குயிலோசை......!!

இடையில் வந்த இடியோசை என
இங்கிலீசின் இரைச்சல் பிடித்துப் போக......

இதோ இயர்போனை செவியில் மாட்டி
இன்பம் இதுவேயென மயங்கி நிற்கிறோம்.....

வானம் தலை தட்டியதன்
வண்ணம் இப்போது புரிந்தது......

பாரடா அங்கே குயிலோசை உன்
பைந்தமிழ் இனிமை பயில - நீயோ

பறங்கியர் மொழியில் பாசம் வைத்து - தமிழ்
பண்பாட்டை மறந்து நிற்கிறாய்.......

சொல்லிலே தமிழ் தமிழ் என்று
சொன்னால் மட்டும் போதாது - நீ
சுகமெனவே பிறமொழியை
சொர்க்கமென்றே எண்ணி விட்டாய்....

தவறென்று அதை நான் சொல்ல மாட்டேன்-எனினும் பெற்ற
தாயை நீ தவிக்க விடல் என்ன ஞாயம்.......?!

இந்த நொடியிலிருந்து நீ
இனியதமிழ் பேசிப் பழகு என்று.......

எனதருமை மகா கவியே - அந்த

வானம் தலை தட்டியதன்
வண்ணம் இப்போது புரிந்தது......!!

காலம் வென்ற கவிஞர் பெருமானே
வாழ்க வளர்க உமது புகழ்.......
உம்மிடம் ஒரு வேண்டுகோள்......

அடுத்து நான்
பெற்றெடுக்கப் போகிறேன் எனது
11001 வது தமிழ் கவிதையை......அதற்கு

பேறுகாலம் பார்த்து
பெயரும் வைத்து விடு.......

உயிருள்ளவரை மறவோம் யாம்
உம்மையும் - எமது
உயர் தனிச் செம்மொழியையும்......

வாழ்க - வளர்க - வெல்க தமிழ்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Mar-14, 8:11 am)
பார்வை : 541

மேலே