சர்லா கர்லா
வாங்க தம்பி. நம்ம பெயர் விற்பனை மையத்துக்கு இப்பத்தான் மொதல் தடவையா வர்றீங்க போல இருக்குது.
உங்க பேரு, முகவரியைச் சொல்லுங்க.
(வந்தவர் சொல்ல, பெயர் விற்பனை மையத்தின் அலுவர் ஒரு பதிவேட்டில் எழுதுகிறார்.) சரி உங்க கொழந்தையைப் பற்றிய விவரத்தைச் சொல்லுங்க.
@@@@@@
அய்யா, என் மனைவிக்கு தலைப்பிரசவம். ரட்டைக் கொழந்தைங்க. ரண்டும் பெண் கொழந்தைங்க.
@@@#
சரி..உங்களுக்கு எந்த மொழில பேருங்க வேணும்?
@@@@@
அதென்னங்க அப்பிடி கேட்டுடீங்க. தமிழர்கள் நாகரிகப்படி இந்திப் பேருங்கள வச்சத்தாங்க மரியாதையா இருக்கும். தமிழ்ப் பேருங்கள வச்சா யாரும் எங்கள மதிக்கமாட்டாங்களே.
@#@@@@
சரி. ரண்டு கொழந்தைங்களுக்கும் வைக்கிற பேருங்களுக்குத் தொடர்பில்லாத தனித்தனி பேருங்கன்னா ஒரு பேரோட விலை ரண்டாயிரம் ரூபாய். ரண்டு பேருங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கறதா இருந்தா ரண்டுக்கும் சேத்து ஏழாயிரம் ரூபாய். என்ன சொல்லறீங்க?
@@@##
ஒரே மாதிரி இருக்கற பேருங்களச் சொல்லுங்க அய்யா.
########
சர்ளா, கர்ளா. இந்தப் பேருங்களுக்கு அர்த்தங்களச் சொல்லணுமின்னா அதுக்கு தனியா மூவாயிரம் குடுங்க. அர்த்தம் வேணாங்க. யாரும் அர்த்தம் தெரிஞ்சு பேரு வைக்தில்லீங்க. இந்தாங்க பணம். வர்றேணுங்க.
@@@@@
சரி தம்பி.
■■■■◆◆◆◆◆◆◆◆◆■■●■■■■◆◆■
Sarla = honest, straightforward
Karla = womanly. (Indian, Norwegian, English, German, French origin)