ரேனுஸ்ரீ-பகுதி 12

பரிச்சை முடிந்த உடன் எங்கள் வகுப்பு ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தார்,வந்த ஆசிரியர் எங்கள் அனைவரையும் அவர் அவர் இருக்கையில் அமர கூறினார்,எனக்கோ ஸ்ரீ வீட்டிற்கு சென்று விடுவானோ என்று கவலையாகவும்,பதட்டமாகவும் இருந்தது.

சரி என்னதான் கூற போகிறார் என்று கேப்போம் என்று நினைத்து ஆசிரியரை பார்த்தேன்.

எல்லார் முகத்துலையு எக்ஸாம் முடுஞ்ச சந்தோஷோ தெரியுது என்று புன்னகைத்தபடி அனைவரையும் பார்த்தார் ஆசிரியர்.
வீட்டுக்கு போய் தூங்கலா,டிவி பாக்களா,எக்ஸாம் முடுஞ்சத சந்தோஷத்த கொண்டாடலானு பார்த்தா,வீட்டுக்கு போகவிடாம இவ வேற வந்து
உட்கார்ந்துகிட்டான்னு எத்தன பெரு மனசுக்குள்ள திட்றீங்களோ தெரில என்றார்.

என் வகுப்பினர் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி அப்படில இல்ல சார் என்று கூறினார்கள்.

சரி நம்பிட்ட..,உங்க எல்லார் கிட்டையு பேசனோனு இருந்த,கவலபடாதீங்க ரொம்ப நேரோ எடுத்துக்கமாட்ட,ஒரு டீச்சரா உங்களுக்கு சில விஷயங்கள சொல்ல வேண்டியது என்னோட கடம.
சரி உங்க எல்லாருக்கோ ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ப ஸ்கூல்ல நடந்த பிரச்சன பத்தி தெரிஞ்சு இருக்கோனு நினைக்கிற என்கிறார்.
அவர் அவ்வாறு கூறியவுடன் என்னை தவிர அனைவரும் "தெரியு சார்" என்று ஒரே போல கூறினர்.
நான் என் பக்கத்தில் அமர்ந்திருந்த ரம்யாவை பார்த்து "ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன ஆச்சு" என்று கேட்டேன்.
அவள் என்னை சலிப்போடு பார்த்தபடி"தலைய குனிஞ்சிட்டே போய் குனுஞ்சிட்டே வந்தா சுத்தி என்ன நடக்குதுன்னு எப்படி தெரியோ?,ம்ம்...,ஒரு வாரத்துக்கு முன்னாடி 8th படிக்குற அண்ணா ஒருத்தர் அவர் கூட படிக்குற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்து,அந்த விஷயோ அவங்க வீட்ல தெரிஞ்சு பெரிய பிரச்சன ஆயிடுச்சு என்று கூறிக்கொண்டிருந்தால்.

"ரேணு!"என்று அதட்டிபடி என் பெயரை கூறி அழைத்து விட்டு,"நா இங்க பேசிட்டு இருக்க"என்று கூறினார் ஆசிரியர்.

சாரி சார் என்று வருந்தி கூறினேன்.

என்னை பார்த்து புன்னகித்துவிட்டு,நா பேசி முடுச்ச பிறகு நீ பேசிக்கோ என்றார்.
பிறகு அமைதியாக எதையோ யோசித்தபடி ஒரு பெருமூச்சிற்கு பிறகு பேச தொடங்கினார்.
இதுதா நா இந்த ஸ்கூல்ல வேல பாக்கற கடைசி நாள்,எனக்கு transfer கெடச்சு இருக்கு,சோ இன்னைக்குதா என்னால உங்க கிட்ட பேச முடியு,அதனால என்ன பேசவிடுங்க,நா பேசிமுடுச்ச பிறகு நீங்க உங்க பிரிஎண்ட்ஸ்(friends )கிட்ட பேசிகோங்க என்றார்.
சரி என்ன பேசிட்டு இருந்தோ,ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ப ஸ்கூல்ல நடந்த பிரச்சனைய பத்தி இல்லையா?,என்றார்.
அனைவரும் ம்ம்ம்...என்றபடி தலையை ஆடினார்கள்..

பிரச்சன என்னனா நம்ப ஸ்கூல்ல 8th படிக்குற பைய்ய,கூட படிக்குற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்து விஷயோ அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அந்த பசங்களோட பெத்தவங்க ஸ்கூலுக்கு வந்தாங்க,அந்த ரெண்டு பசங்ககிட்டையு விசாரிச்ச அப்ப,அவங்க ரெண்டு பெரு ஒருத்தர ஒருத்தர் விரும்புறதா சொன்னாங்க,அத கேட்டு அந்த பெத்தவங்க கதறி அழுதது இன்னமோ எ கண்ணுக்குள்ள நிக்குது,இத எதுக்காக உங்க கிட்ட சொல்றனா அவங்க பண்ண தப்ப நீங்க யாரு பண்ணிடக்கூடாதுனுதா.

அதுக்காக காதல் கொழக்குத்தொண்ணூ நா சொல்ல வரல,காதலிக்கிறதுக்கு இது சரியான வயசு இல்லனுதா சொல்ற,எனா இந்த வயசுல வர காதல சரியா கையாள்ற மெச்சுரிட்டி(maturity )உங்களுக்கு இருக்காது,அதனாலதா படிக்குற வயசுல காதல் கூடாதுனு சொல்ராங்க.
ஆனா இதே வயசுலதா குழந்தைங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு crush அதாவது ஈர்ப்பு ஏற்படுத்து அது பெரியவங்களுக்கு புரியறதில்ல.

பிரச்சனையே பாத்திங்கனா குழந்தைங்களால பெரியவங்களோட இடத்துல இருந்து யோசிக்க முடியறதில்ல, பெரியவங்க குழந்தைங்களோட மனநிலைய அவங்களுடைய பிரச்சனையா புரிஞ்சுக்க முயற்சி செய்றதில்ல.
நா ஒரு புக்ல படுச்ச 80 % பிள்ளைகளுக்கு 12 வயசுலையே crush ஏற்பட ஆரம்பிச்சுடுதுனு சொல்ராங்க,இது ரொம்பவே இயல்பு,ஒரு அர்மோன் செஞ் அவ்வளவுதா,எல்லாருக்குமே ஸ்கூல் டேஸ்ல கண்டிப்பா crush ஏற்பட்டு இருக்கோ.ஏ எனக்கு கூட ஏற்பட்டு இருக்கு,அத நீங்க சீரியஸ்ஸா எடுத்துக்காத வரைக்கு எந்த பேரச்சனையு இல்ல,அப்படி உங்களுக்கு யரான காதலுச்சே அகநோனா உங்க பேரன்ட்ஸ்ச(parents ) காதலிங்க,என்ன பொறுத்த வரைக்கு யாரால அவங்களுடைய பெத்தவங்கள நேசிக்க முடியலையே அவங்களுக்கு வேற யாரையுமே நேசிக்க தகுதி இல்லன்னுதா சொல்லுவ.

சரி இங்க இருக்கவங்கள்ள எத்தன பேரோட அம்மா,அப்பா பன்னண்டாவது(12th )வரைக்கு படுச்சவங்க இருக்காங்க கையத்துக்குங்க என்றார்.

என்னையும் சேர்த்து வெறும் நான்கு பேர் மட்டுமே கையை தூக்கினார்கள்.

இந்த கிளாஸ் ரூம்ல 50 பிள்ளைகள் இருக்கீங்க,ஆனா வேறு நாலு பேரோட பெற்றோர்தா பன்னண்டாவது வரைக்கு படுச்சு இருக்காங்க,நல்லா படுச்சிருக்க பெற்றோர்கள் நல்ல வேலைகள்ள இருக்கறதால அவங்களோட பிள்ளைகள கான்வென்ட்ல படிக்க வெக்குறாங்க.
படிப்பூ,வசதியு இல்லாத பெரும்பாலான பெற்றோர்கள்தா தனக்கு கிடைக்காதா படிப்பு தன் பிள்ளைகளுக்காவது கிடைக்கணு அவங்களோட வாழ்க்க நல்லா இருக்கனோனு அரசாங்க பள்ளிகள்ல செக்கறாங்க.

எத்தன பிள்ளைகள் விட்ட விட்டு வெளிய வந்த பிறகு அவங்களோட பெற்றோர்கள நினச்சு பாக்கறாங்கனு எனக்கு தெரில,ஆனா எல்லா பெற்றோர்களுமே எப்பையு அவர்களுடைய பிள்ளைகளப்பத்திதா நினச்சுட்டு இருக்காங்க,அதுலையு முக்கியமா நீங்க அவங்க கூட இல்லாத அப்ப அதிகமா நினைப்பாங்க,எனா அவங்களோட உலகமே நீங்கதா,அப்படி பட்ட பெற்றோர்க்கு நீங்க என்ன செய்ய போறிங்கjQuery17103172800944624654_1561151975728
பெருசா ஏதோ செய்ய வேண்டா நீங்க நல்லா படுச்சு,நல்லா இருந்திங்கனாளே உங்க பரென்ட்ஸ்(parents )உங்கள நெனச்சு சந்தோஷ படுவாங்க,அந்த சந்தோஷத்த நீங்க குடுத்திகனாலே போது.
நல்லா படிங்க,உங்களுக்குனு ஒரு லச்சியத்த ஏற்படுத்திக்கங்க,அந்த லச்சியத்த அடையதுக்கு முயற்சி செய்க.
இப்ப உங்க யாருக்காவது என்கிட்டே எதுனா கேக்கனோனா கேக்கலா என்று கூறினார்.

ஒரு மாணவன் ஆசிரியரிடம்"எந்த ஊருக்கு சார் transfer ஆகி போறிங்க" என்று கேட்டான்.
அதற்க்கு ஆசிரியர் "திண்டிவனம் என்றார்.
மற்றொரு மாணவி"சார் உங்களுக்கு எத்தனை பசங்க?"என்று கேட்டால்.
ஒரே பொண்ணு,பெரு ரேணுகா.என்று கூறினார்.
அக்கா என்ன சார் படிக்குறாங்க?என்று கேட்டால் மற்றொரு மாணவி.
ஆசிரியர் சிரித்து விட்டு"ஆச்சு நா எ family பத்தி சொல்ற,என்னோட மனைவி பெரு உமா,திண்டிவனம் கவர்மெண்ட் ஸ்கூல் ல டீச்சரா வேல பாக்கறாங்க,ஒரு வருஷத்துக்கு முன்னாடிதா வேல கிடச்சு பாப்பாவோட திண்டிவனம் போனாங்க,அதுல இருந்து transfer க்கு முயற்சி செஞ்சு இப்பதா எனக்கு transfer கிடச்சது,எங்களுக்கு ஒரே பொண்ணு பெரு ரேணுகா,ரேணுனு கூப்புடுவோ,இப்ப 9th படிக்குற,அவ பொறந்ததுல இருந்து நா அவள பிருஞ்சு இருந்ததே இல்ல என்று கூறியபடி என்னை பார்த்தார்.
சில நொடிகள் என்னை அமைதியாக பார்த்தபடி பாக்க உன்ன மாறிதா இருப்பா,உன்ன பாக்கும் போதெல்லா அவள பாக்கரமாரி இருக்கோ"என்று கூறி அன்போடு புன்னகித்தார்.
நானும் அவரை பார்த்து புன்னகித்தேன்.
என் வகுப்பினர் அனைவரும் என்னையே பார்த்தனர்.
பின்பு ஆசிரியர் என்னை பார்த்து,நல்லா படிக்கனு சரியா என்றார்.
நான் புன்னகித்தபடி சரி என்பது போல தலையை ஆட்டினேன்.
சரி நீங்க எல்லாரு போகலா,நல்லா படிங்க,ஆல் தி பெஸ்ட்,என்று கூறி அவர் இருக்கையில் இருந்து எழுந்தார்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஆசிரியர்க்கு நன்றியை தெரிவித்தோம்.
ஆசிரியர் வகுப்பை விட்டு சென்ற பிறகு அனைவரும் அவர் அவர் நண்பர்களுடன் பேச தொடங்கினர்.

இறுதியாக ஆசிரியர் அன்று என்னை எதற்க்காக அடிக்க தயங்கினார் என்று தெரிந்தது,அவர் என் உருவில் அவர் மகளை கண்டதே காரணம் என்று புரிந்தது.
என் தந்தை கூறியது உண்மைதான் காரணமின்றி காரியமில்லை,சில சமயங்களில் சில விஷயங்கள் எதற்காக நடக்கிறது என்று அப்போது நமக்கு தெரியாவிட்டாலும்,அதை தெரிந்து கொள்ளவேண்டிய காலம் வரும் போது நிச்சயம் அது நமக்கு தெரிய வரும் என்பது புரிந்தது.

நான் என் நண்பர்களுடன் பேசிவிட்டு,விடை பெறுகிறேன் என்று கூறி வெளியே வந்து பார்த்த போது ஸ்ரீயின் சைக்கிள்ளை காணவில்லை,ஸ்ரீயின் வகுப்பிலும் யாருமில்லை,ஸ்ரீ பள்ளியில் எங்கும் இருப்பது போல தெரியவில்லை.
இறுதியாக அவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போயிற்று,ஸ்ரீ எனக்காக காத்திருக்க வில்லை.
பள்ளியும் முடிந்தது,நமக்கும் ஸ்ரீக்கும் இடையில் இருந்த க்ரஷ்சூம்
(crush )முடிவுக்கு வந்தது என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

ஆசிரியர் கூறிய அனைத்தையும் நினைத்தபடி வீட்டிற்க்கு சென்றேன்.
என் அம்மா சமையல் அறையில் இருந்தார்,சென்று என் அன்னையை அனைத்து கொண்டேன்.
என்ன ஆச்சு எக்ஸாம் சரியா எழுதலையா?என்று கேட்டார் என் அம்மா.
அதெல்லா பாஸ் ஆயிடுவ என்று கூறினேன்.
அப்ரோ எ ஒரு மாரி இருக்க என்று கேட்டார்.
ஒண்ணோ இல்ல மா டையர்டா(tired )இருக்கு என்றேன்.
சரி வா சாப்பாடு போடற என்றார்.
நீ சாப்டியா என்று கேட்டேன்.
என் அம்மா என்னை ஆசிரியத்தோடு பார்த்தார்.
அவருடைய பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடிந்தது,எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் என் தாயிடம் சமையல் தயாரா என்றுதான் கேட்டு இருக்கிறோமே தவிர அவர் சாப்பிட்டாரா என்று கேட்டதே இல்லை.
இல்ல டா நீ வந்த பிறகு சாப்புடலானு வெயிட் பண்ணிட்டு இருந்த என்று கூறினார்.
என் அம்மாவின் கையை பிடித்து "மா ஐ லவ் யு"என்று கூறினேன்.
ஐயோ லவ் யூனு எல்லா சொல்ல கூடாது,அந்த வார்த்தையலா நீ பயன் படுத்த கூடாது தப்பு,என்று வெகுளி தனமாக முகத்தை வைத்தபடி கூறினார்.
அப்ப சரி ஹெட் யூ( hate u ) மா என்றேன்.
என்னடி....,என்றார்.
நீ தான லவ் யு னு சொல்ல கூடாதுனு சொன்ன அதா ஹெட் யு என்றேன்.
என் அம்மா புன்னகித்து விட்டு என் கன்னத்தை பிடித்து லவ் யு டு(love u too )என்று கூறினார்.
நீ மட்டு லவ் யு னு சொல்லலாமா என்று கேட்டேன்.
நா ஓ அம்மா டி நா சொல்லுவ நீ தா சொல்ல கூடாது என்றார்.
நான் சிரித்தபடி ஹெ..,இது என்ன போங்கு ஆட்டமா இருக்கு நா ஒத்துக்க மாட்ட,நானு சொல்லல நீ யூ சொல்லாத என்று கூறினேன்.
அதன் பிறகு நானும் என் அம்மாவும் அன்று வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம்.

விடுமுறையின் போது ஸ்ரீயை பார்க்காமல் நினைக்காமல் இருப்பது மிக கடினமாக இருந்தது.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றேன்,எப்போதும் போல ஸ்ரீ அமரும் இடத்தை பார்த்த போது மனதில் கூர்மையான வலி ஏற்பட்டது ,எங்களது பள்ளி நடுநிலை பள்ளி என்பதால் ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பிற்கு ஆண்கள் அரசு உயர் நிலை பள்ளிக்கு சென்றிருப்பான் என்றும்,இனி இப்பள்ளிக்கு வரமாட்டான் என்று தெரிந்திருந்தும் கூட அவன் பள்ளிக்கு வரமாட்டானா,அவனை காண முடியாதா என்று மனம் ஏங்கியது,அவனுடைய நினைவுகள் நிறைந்த இப்பள்ளியில் அவன் இல்லாமல் எவ்வாறு இரண்டு வருடங்கள் இருக்க போகிறேன் என்று நினைத்து வருந்தினேன்.
பள்ளியின் முதல் நாள் அனைத்து ஏழாம் வகுப்பு மாணவர்களையும் அமர்த்தி யார் யார் எந்த பிரிவு என்று கூறிக்கொண்டிருந்தனர்,வருடம் வருடம் எங்கள் பள்ளியில் இவ்வாறு செய்வது வழக்கம்,இதன் காரணமாக வகுப்பு தோழர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள்,எனக்கு ஏழாம் வகுப்பு சி பிரிவும்,பானுவிற்க்கு பி பிரிவும் கிடைத்தது.இருவரின் வகுப்பறை வேறு வேறு என ஆகிவிட்டது.

பள்ளியின் இரெண்டாவது நாள் எங்கள் ஆசிரியர் மற்றும் ஏன் வகுப்பினர் அனைவரும் வகுப்பிற்கு வெளியே அமர்ந்திருந்தோம்,
அப்போது ஆசிரியர் எங்கள் அனைவரையும் எங்களுக்கு தெரிந்த A வில் ஆரம்பிக்கும் ஆங்கில வார்த்தைகளை எழுதுமாறு கூறினார்,
ஆசிரியர் கூறியவாறு எனக்கு தெரிந்த வார்த்தைகளை எழுதி கொண்டிருந்தேன்.15 வார்த்தைகளை எழுதிய பிறகு இன்னும் வேறென்ன எழுதுவது என்று யோசித்தபடி வலது பக்கம் திரும்பினேன்,நான் பார்த்த போது ப்ரின்ஸிபல்(principle ) அறையில் இருந்து ஸ்ரீயும் அவனுடைய தந்தையும் வெளியே வருவதை கண்டேன்.
ஸ்ரீ ப்ரின்சிபிள் அறையில் இருந்து நேராக நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்,கையில் ஏதோ காகிதங்களை வைத்திருந்தான்,அவன் டீசி (transfer certificate )வாங்குவதற்காக வந்திருக்கிறான் என்று புரிந்தது,நான் அவனையே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்,நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை காண்கிறேன் ஏனோ மகிழ்ச்சிக்கு பதிலாக மனதில் வலியையும்,பாரத்தையும் உணர்தேன்.
ஸ்ரீ எங்கள் வகுப்பு ஆசிரியரிடம் அவன் கையில் இருந்த காகிதத்தை கொடுத்து ஏதோ கூறினான்,எங்கள் ஆசிரியர் அதை வாங்கி பார்த்துக்கொண்டிருந்தார்,அப்போது ஸ்ரீ என்னை எதர்ச்சியாக பார்த்தான்.
என்னால் ஸ்ரீயின் முகத்திலும் என்னை கண்ட மகிழ்ச்சியை பார்க்க முடியவில்லை,அவனது முகம் தெளிந்த நீரை போல இருப்பதாலோ என்னவோ எனது மனதின் நிலையை,உணர்வை அவனது முகம் பிரதிபலிப்பது போல தெரிந்தது,என் உள் இருக்கும் அதே வலியையும்,பாரத்தையும் அவன் கண்களில் காண முடிந்தது,கண்களை கூட இமைக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தோம்,அப்போது ஸ்ரீயின் தந்தை ஸ்ரீயிடம் "தம்பி சார் ஏதோ கேக்கறாரு பாருபா"என்று கூறினார்.
ஸ்ரீ சாரிடம் பேசிவிட்டு மீண்டும் என்னை தயக்கத்துடன் பார்த்தான்,ஸ்ரீ என்னை பார்த்த மறு நிமிடம் எங்க ஆசிரியர் ஸ்ரீ கொடுத்த காகிதத்தில் கையெழுத்திட்டு ஸ்ரீயிடம் கொடுத்தார், அதை வாங்கி கொண்டு மீண்டும் ப்ரின்சிபிள் அறைக்கு சென்றான்.

சிறிது நேரம் கழித்து வேலை முடிந்து அவன் பள்ளியில் இருந்து செல்வதை கண்டேன்.அவன் செல்வதை பார்த்தபடி இருந்தேன் ஆனால் ஒரு முறை கூட அவன் என்னை திரும்பி பார்க்கவில்லை.
அதுதான் நான் ஸ்ரீயை இறுதியாக பார்த்தது.

தொடரும்......

எழுதியவர் : அனுரஞ்சனி (22-Jun-19, 2:49 am)
பார்வை : 173

மேலே