நல்ல காலம் பிறக்கிறது

மனதில் தெளிவு வெற்றி உனதே
மனதில் வலிமை வெற்றி உனதே
நெஞ்சில் நேர்மை வெற்றி உனதே
என்றும் வாய்மை வெற்றி உனதே

உன்னைக் கடக்கும் தீமை கூட
வழியோ தவறென நினைத்துக் கொள்ளும்
எங்கோ சென்றிடும் நன்மை திரும்பி
வந்தனம் சொல்லிப் பின்னுனைத் தொடரும்

நமக்கென்ற காலம் நமது இதயத்தில்
நமக்கென்ற வெற்றி நமது எண்ணத்தில்
நமக்கென்ற இலக்கு நம்கண் முன்னே
இன்னுமேன் தயக்கம் பாடிடு பண்ணே

இருக்கும் காலமிது நல்ல காலமே
கிடைக்கும் காலமெலாம் நமக்கு வரமே
நற்சிந்தனையை ஆக்குவோம் நாம் உரமே
இனியென்றும் விடியலில் மகிழ்ச்சிப்பூ பூக்குமே

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (22-Jun-19, 8:29 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 114

மேலே