நெடுவாழ்வின் நினைவு கவிஞர் இரா இரவி

நெடுவாழ்வின் நினைவு!

கவிஞர் இரா. இரவி.

******

நெடுவாழ்வின் நினைவு எல்லோருக்கும் உண்டு
நீங்காத நினைவு மூளையின் மூலையில் உண்டு!

பெற்றோர் வளர்த்த பாசம் நீங்காத நினைவு
பசுமையான நினைவு மறக்க முடியாத நினைவு!

முதல் காதல் கைகூடாவிட்டாலும் நம்
மூளையின் நினைவில் மறக்காமல் இருக்கும்!

மணமுடித்த திருமண நாள் நினைவில் நிற்கும்
மனதை விட்டு அகலாமல் நிலைத்து நிற்கும்!

வாரிசு வெளிவந்த நாள் மறக்காது இருக்கும்

வளமான நினைவுகள் எளிதில் மறப்பதில்லை!

சோகமான நிகழ்வுகளும் நினைவில் நிற்கும்
செத்துப்போன நண்பரின் நினைவும் நீங்காதிருக்கும்!

பசுமரத்து ஆணி போல பதிந்தவைகள் உண்டு
பழையவை பல மறந்து விடுவதும் உண்டு!

சுகமான நினைவுகள் எப்போதும் சுவை தருபவை
சோகமான நிகழ்வுகள் எப்போதும் கவலை தருபவை!

பிறந்தவுடன் நடந்தவைகள் நினைவில் இல்லை
இறந்தபின்னே நடப்பவைகள் தெரிவதும் இல்லை!

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Jun-19, 8:39 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 57

மேலே