கவிச்சைப் பிரியா

ஏன்டி கண்ணம்மா, உன்னோட சென்னை மருமவ பிரியாவை ஏன்டி 'கவிச்சைப் பிரியா'ன்னு சனங்க சொல்லறாங்க.
@@@@@
சென்னையில குடிசைப் பகுதில வளந்தவ பிரியா. அங்கெல்லாம் மீனு கருவாடு இல்லாம எதுவும் சாப்பிடமாட்டாங்க. காலைல பழைய சோறு குடிக்க கருவாட்டை நெருப்பில சுட்டு அதக் கடிச்சிட்டு கஞ்சியைக் குடிப்பாங்க. மொத்தத்தில் மூணு வேளையும் கருவாடு அல்லது மீனு வாசம் இருந்தாத்தான் அவுங்களுக் சோறு தொண்டையில எறங்கும். அசைவத்தை சென்னையில கவிச்சைனு சொல்லுவாங்க. மூணுவேளையும் கவிச்சை இல்லன்னா எம் மவனை மணமுறிவு (விவாகரத்து பண்ணிடுவேன்னு அந்தப் பிரியா மெரட்டறா யக்கா.
@@###
நீ தான்டி அழகான உம் பையனுக்கு அழகான அந்தக் கவிச்சைக்கு 10 பொருத்தமும் இருக்குதுன்னு திருமணம் பண்ணி வச்சே. உங்க வீட்டுப் பேரை 'கவிச்சை இல்லம்'னு மாத்துங்கடி.

எழுதியவர் : மலர் (25-Jun-19, 10:49 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 49

மேலே