மழையின் கீதம்

வானருவி மண்ணில் வீழ்ந்து
விதைகளுக்கு எல்லாம் உயிர்கொடுத்து
தேனருவி தான் தவழ்ந்து
கையில் வர
அமிர்தம் என்று நான் பருகி
ஆசைத்தீர இளைப்பாறி
குடை வேண்டாம் தடை செய்ய
என்றுணர்ந்த என் உடலுக்கு
பிணி நேரும் அச்சம் ஒரு புறமும்
மனம் சேரும் இன்பம் மறுபுறமும் இருக்க
பயிர் வளர உயிர் கொடுத்தமைக்கு
நன்றி கூறிய வான்சிறப்பை அருளிய
வள்ளுவனுக்கு
தினம் கொண்டாடி
அவனை மகிழ்வித்து,
தமிழுக்கு பறைசாற்றும் தூய தமிழனுக்கு
மட்டுமே புரியும்
மணல் பேசும் அமைதி மொழி - அது
நறுமணம் வீசும் இனிய மொழி
மண்ணில் மடிந்த இலைகள் எழுதிய
கவிதைகள் கொண்டு
ரயில்கள் அமைத்த மெட்டுகளும்
வண்டுகள் கூட்டிய ஸ்வர ஒலிகளும்
பொருந்திய சீரிய இசையில்
இயற்கை வானில்
குயில்கள் பாட மயில்கள் ஆட
அரங்கேறியதொரு
மழையின் கீதம்!!!

எழுதியவர் : கா.மணிகண்டன் (25-Jun-19, 9:10 pm)
Tanglish : mazhaiyin keetham
பார்வை : 3891

மேலே