சிந்திப்பாய் மானிடா

கானழித்து வானளாவக் கட்டடங்கள் கட்டினாய்
கழிவுகளால் நதிநீரை மிகவசுத்த மாக்கினாய்!
ஆனமட்டும் நெகிழியினால் மண்ணைமல டாக்கினாய்
ஆறுகளில் மணல்திருடி அதன்தடத்தை மாற்றினாய் !
வான்பொய்த்தால் குடிப்பதற்கும் நீரின்றிப் போகுமே
வளங்குன்றி வறட்சியினால் பல்லுயிர்கள் சாகுமே !
ஏனென்ற காரணத்தைச் சிந்திப்பாய் மானிடா
இயற்கையினைச் சிதைத்துவிட்டால் இந்நிலைமை தானடா ...!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Jul-19, 1:18 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 86

மேலே