சினிமா பாடல் க்விஸ்
இன்றைய திரைப் பாடல்களில் கவிதை நயம் குறைந்து கொண்டே வரும் வேளையில், சில பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கவிதை நயமிக்க சில பாடல் வரிகளை இங்கே கொடுத்திருக்கிறேன். எந்த பாடல்களில் இடம் பெற்ற வரிகள் இவை ?
1."இதயம் ராத்திரியில் இசையால் அமைதிபெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்புப் பாறையிலும் இசையால் நீர்க் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்"
2."எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்"
3."சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பச்சிகள் வாழும் கூடுகள்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு வின்னைத் தீண்டுதே"
4."ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றைப் போலே நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்த பின்னே நாள் முடிந்து போனதா
சந்தனம்தான் காய்ந்த பின்னே வாசமின்றிப் போனதா"
5."கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன்மின்னல்
நடந்து போகின்றது"
6."நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்"
7."மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்"
8."பறவைகள் பறந்து செல்ல
பள்ளம் மேடு வானில் இல்லை
நீயும் நானும் பறவை ஜாதியே
நிம்மதிக்கு தடைகள் இல்லையே"
9."கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது?
ஆகாயம் எங்கிலும்
நீலம் யார் தந்தது ?
இயல்பானது"
10."நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி"