நட்பு 1

நட்பு

நட்பில் பூ இருப்பதால்
அது மனத்தில் இருக்கிறது
மனத்தில் மறைந்து இருப்பதாலோ என்னவோ
அதில் மணம் இருப்பதில்லை

நட்பில் பூ இருப்பதாலோ
என்னவோ அனைவரும்
பிறர் காதில் மட்டுமே
சூடுகின்றனர்

மாலையாக வருவது பூ
நண்பனிடம் ஏதாவது
வேலை ஆக வருவது நட்பு

பகல் அழிந்துவிட்டால்
இரவு ஆகும் கருப்பு
அழிந்துவிட்டால்
மீட்க முடியாதது கற்பு
அழிக்கவே முடியாது
உண்மையாய் இருப்பதே நட்பு

சுயநலதால் வலி
கொண்ட நட்பு பல
மனிதர்களின் அகத்திலிருந்து
செய்வது வெளி நடப்பு

நட்பு பிறக்கும் அகம் மூன்றெழுத்து
அகத்தில் இருக்கும்
உயிர் மூன்றெழுத்து
உயிரில் வாழும்
தமிழ் மூன்றெழுத்து
தமிழ் கொடுக்கும்
புகழ் மூன்றெழுத்து
புகழுக்கு வித்திடும்
நட்பு மூன்றெழுத்து
கற்பு மூன்றெழுத்து
கற்பைக் கலவாடும்
காமம் மூன்றெழுத்து
தமிழ் நட்பு உண்மை
இவற்றிற்கு நாம் போடும்
நாமம் மூன்றெழுத்து

பூவைப் பிளந்தேன்
தேன் கண்டு வியந்தேன்
பலரை மனதில்
சுமந்தேன் அவர்
நட்பைப் பிளந்தேன்
ஏமாந்தேன்

நதி விளை
நிலத்தைத் தேடி
ஓடி கடலில்
கலப்பதைப்போல்
நான் நட்பைத் தேடி ஓடி
கடலில் கரைந்துகொண்டிருக்கிறேன்

எழுதியவர் : புதுவை குமார் (20-Jul-19, 7:48 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 842

மேலே