இருளே நிரந்தரமா

ஒளி வருமா?
இருளே நிரந்தரமா?
நெஞ்சம் ஏக்கத்தில் தடுமாறும் கவலைகள் நிறைந்த வாழ்வில் ஒவ்வொரு நொடியும் கரைய கனவுகளை சுமந்து கால்கள் தறுமாறாக ஓட சரியான பாதை காண ஒளி வருமா? இருளே நிரந்தரமா?

தரமான வாழ்க்கை என்பதில் ஏது உத்திரவாதம்?
சந்தேகங்கள் பல சஞ்சலமாய் மாற கோரமான கனவுகள் நனவாய் மாற,
கால்களை பாதுகாக்கச் செருப்புகள் அணிந்தால்,
அச்செருப்புகள் கால்களை காயப்படுத்தும் சூழ்நிலைகள் பல உருவாக, நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ஒளி வருமா? இருளே நிரந்தரமா?

சுவாசம் நிற்கும் முன்னே சாதிக்கும் எண்ணம் வேண்டும்.
சாதிக்கும் வரை சுவாசம் நிற்க கூடாது.
சாதாரணத்தில் இருந்து அசாதாரணம் பிறக்கும் அந்நொடி சாதாரண மனிதன் சாதனையாளன் ஆகிறான்.
புரிந்தும் நீ இன்னும் ஒளி வருமா?
இருளே நிரந்தரமா?
என்றெண்ணி தடுமாறுகிறாயோ?

எல்லாம் சாதாரணம் என்றெண்ணினால் சாதனை கூட சாதாரணமாக சாதிக்கலாம் நெஞ்சே.
தயக்கம் போதும்.
மயக்கம் மாயட்டும்.
உன்னோடு நீ இணங்கி உன் திறமையை வெளிகாட்டு.
ஒளி உன்னிடம் வெளிப்படும்.
இருளை வெல்லும் வெளிச்சம் பிரகாசித்திடும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Jul-19, 6:17 pm)
பார்வை : 2273

மேலே