உயிரே உறங்காதே
உயிரே உயிரே
உறங்காதே
உறவை நீயும்
வெறுக்காதே
கனவே கனவே
களையாதே
காதலை
இழந்து
கலங்காதே
கண்மணியே
பொண்மணியே
உன்ன எண்ணியே
நான் வாழ்வேன்
என் தவமணியே
சிறகு ஒடிந்த பறவை போல
நானும் ஆனேன்
உன் விழிகளை கண்டு
ஏதோ நானும் பாக்குற
தனியா இருந்து பேசுற
நதியின் கரை ஓரமாய்
நாற்காலியில் ஒய்யாரமாய்
தனியா அமர்ந்து
நினைக்கின்றேன்
மழை அழுவதையும்
பார்க்கிறேன்
என்னை சுற்றிலும் நதியின் தண்ணீரும்
என்னை சுற்றிலும் கண்களில் கண்ணீரும்
ஏக்கத்தோடே ஏழு ஜென்மம்
ஏங்கி ஏங்கி கலங்குறேன்
பூசும் மஞ்சள் நீ அரைத்து
முகத்திலே அதை பூசித்து
மாகாளியாக நீ நடக்கையில்
கள்ள காமம் மறந்து போவேன்
காதல் சொல்ல வந்த
என்னை இன்று கவிஞன்
ஆக்கி போனாய்
என் காதல் கவிதைகளை
படைத்து இன்று
காவியமாக்க வைத்தாய்