மாலையில் மௌனமாய்ச் சிரிக்கும்

இரவில் சிரிக்கும் அல்லி
காலைக்கதிர் விரியும் போது தாமரை
நிலவு வந்து ரசிக்கவும்
விடை பெறுமுன் ஆதவன் பார்க்கவும்
நிலவும் கதிர் இருவருக்கும்
மாலையில் மௌனமாய்ச் சிரிக்கும்
ஒரே மலர் நீ மட்டும்தான் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-19, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே