விடியா பொழுதை

நூலாடை வேண்டாமென காதில்
பேரம்பேசி

பாலாடை நகர்த்தலாய் மேலாடை
மெல்லகலைத்து

பூவாடை போர்த்தி மேனிமறைத்து

சிற்றிடை சுற்றி சிறுநடை விரல்
பயில

நீரோடையில் மிதக்கும் நிலவாய்
நான் தடுமாற

நீண்ட நெடிய விடியா பொழுதை
மனம் வேண்டியது

எழுதியவர் : நா.சேகர் (21-Aug-19, 6:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vidiyaa pozuthai
பார்வை : 165

மேலே