க க க போ

கற்க விரும்புவோருக்கு கல்வியே போதை
கலவி விரும்புவோருக்கு பெண்டீரெல்லாம் போதை

பேச்சுக் கற்றோருக்கு அடுக்கு வார்த்தைகள் போதை
அலங்காரம் விரும்புவோருக்கு அணிகலனே போதை

அரசியல் விரும்புவோருக்கு அழகு புளுகு போதை
ஆன்மீக ஞானிகளுக்கு ஆன்மீக நிகழ்வு போதை

திட்டமிடுவோருக்கு தெளிவின்மையே போதை
திருடத் துணிந்தோருக்கு ஏமாறுவோரெல்லாம் போதை

இசைக் கோர்ப்போருக்கு எல்லாச் சத்தமும் போதை
இரும்பு இதயத்தோருக்கு இளகியோரெல்லாம் போதை

வட்டித் தொழிலோருக்கு வலியச் சிக்குவோரே போதை
வாணிபம் செய்வோருக்கு வாங்குவோரெல்லாம் போதை
- - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Sep-19, 7:09 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 82

மேலே