அடையாளம்

உள்ளம் பற்றிய அவளுருவம்

கண்டது என்னவோ கணநேரம்

திகைத்து நின்றேன் வெகுநேரம்

கடந்து போயிருந்தாள் பலகாதம்

அறியதுடித்த அவள் பேரும்

அறியாதுபோன அவள் ஊரும்

என்னிடம் இருந்த அடையாளம்

உதவவே இல்லை ஒருகாலும்

தூக்கம் இழந்த சிலகாலம்

கனவை சுமந்தேன் வெகுதூரம்

காணாது போனது அகங்காரம்

தீர்ந்திடுமோ என் மனகேதம்

எழுதியவர் : நா.சேகர் (3-Sep-19, 10:37 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : adaiyaalam
பார்வை : 280

மேலே