என் கண்ணீருக்கு சொந்தக்காரி 555

என்னவளே...

எனக்கென பிறந்தவள்
யாரென தேடலில்...

நீ என்
கண்முன்னே வந்தாய்...

என் வாழ்க்கைக்கு
முதல் புள்ளிவைத்து...

ஆறுதல் சொல்வாய்
என்று நினைத்தேன்...

சில நாட்கள் அன்பாகவும்
ஆறுதலாகவும் இருந்தவள்...

எப்போதும் என் கண்ணீருக்கு
சொந்தக்காரியாகிவிட்டாய்...

ஆறுதல் சொன்னவளே
இன்று அழவைத்துவிட்டாய்...

நானும் உன்
நினைவுகளில் கண்ணீரில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Sep-19, 8:04 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 769

மேலே