என் உயிர் தோழி

என் உயிர் தோழி🙏🏽🤝

காலங்கள் ஓடி விட்டது.
காது முடி நரைத்து விட்டது.
காலம் என்னும் அலை நம்மை எங்கெங்கோ அடித்து சென்று விட்டது.

நாம் படித்த காலத்தில் கைபேசி என்ற அதிசயம் இல்லை.
தொலைபேசி கூட அபூர்வம் தான்.
கல்லூரி வளாகத்தில்
மரம் நிழலில் மணி கணக்கில் பேசினோம்.
மிக்க மகிழ்ச்சியாய் இருந்தோம்.

அன்று மனிதர்களுடன் தொடர்பு கொள்ள கடிதமே எளிமையான சாதனம் .
காதலும் கடிதம் மூலமே
அறிங்கேறியது.
உறவுகள் கடிதத்தை
பிறித்து பிடிப்பதற்குள்
எத்தனை பரபரப்பு,
எத்தனை எதிர்பார்ப்பு,
அந்த சுகமே தனி.

இன்று நிலைமை தலைகீழ்.
எல்லாம் மாறிவிட்டது.
இண்டர்நெட் யுகமாகிவிட்டது.
நிறைய பேசுகிறார்கள்
கைபேசியில்.
நேரில் பார்த்து கொண்டால்
அவர்களா இவர்கள் என்று தோன்றும்.
'மெளன விரதமா' என்று கூட சந்தேகம் வரும்.

உறவுகளில் உண்மை இல்லை.
உறவுகளில் நெருக்கம் இல்லை.
உறவுகளில் இனக்கம் இல்லை.
ஒரு பேச்சுக்கு சொந்தம்,
பந்தம்.
எவ்வளவு பெரிய ஒரு சந்தோஷமும் ஆனாலும்
மகிழ்ச்சி,
அதிக பட்சம் ஒரு நாள்,
அவ்வளவே.
அவ்வளவு வேகமான வாழ்க்கை.
அவசரமான உலகம்.

பணத்தேவை அதிமாகிவிடவே,
இயந்திரம் ஆன மனிதம்.
பொருட்கள் மீது இருக்கும் நாட்டம்
உறவுகளில் இல்லை.

வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது.
ஆடம்பர வாழ்க்கை
அதிகமாகிவிட்டது.
என்றாலும் அடிப்படை 'அன்பு' குறைந்த விட்டது.
ஆத்மார்த்தமான பந்தம்
நொருங்கிவிட்டது
போலி சிரிப்பு அதிகரித்துவிட்டது.

கணினி, இணையம்
எனக்கு சுத்தமாக தெரியாது
என் பேரன் முகநூலில்
உன்னை தேடிவிடலாம்
என்று சொல்லவே,
உன் பெயரை நான் கூற
பத்தே நிமிடத்தில் உன் முகம் நான் அதில் காண
மனம் புல்லரித்துவிட்டது.

எனக்கு முகநூலில் கனக்கை தொடங்கினான் என் பேரன்.
நண்பர் விண்ணப்பம் நான் கொடுக்க வேண்டும் என்று என் பேரன் சொல்ல,
நானும் அவ்வண்ணமே செய்தேன்.
இப்போது நீயும் நானும் மீண்டும் நட்பை புதுபித்தோம்.
என் பேரனுக்கு நன்றி.

உன் குடும்ப புகைப்படம் பார்த்து நிகழ்ந்து போனேன்.
முப்பது வருடம் உருண்டு ஓடிவிட்டன.
'தமிழ் செல்வி'
உன் பெயரை நான் உச்சரிக்க
எனோ என் கண்களில் நீர்.....
ஏதோ ஒரு சோகம் என் நெஞ்சில்....
பெண்ணியம் அதிகம் பேசுவோம்.
பகுத்தறிவு பேசுவோம்.
அரசியல் பேசுவோம்
பாலசந்தரை பாராட்டுவோம்.
பாரதிராஜாவை பாராட்டுவோம்.
சுஜாதாவை படிப்போம்.
ஜெயகாந்தனை படிப்போம்.
படிப்பை பகிர்ந்து படித்தோம்.
கண்ணியத்தோடு பழகினோம்.
நெடுதூரம் நடப்போம்.
உணவை பகிர்ந்து உண்டோம்.

சிக்கனமாக செலவு செய்தோம்.
அடை ஆபரணங்கள் மீது நாட்டம் இல்லை.
அதிக பட்ச ஆடம்பரம் அப்போது சைக்கிள் மட்டுமே .

நல்ல தண்ணீர் குடித்தோம்.
நல்ல காற்றை சுவாசித்தோம்.
சிறுக கட்டி பெறுக வாழ்ந்தோம்.
அது ஒரு கான காலம்.

உன்னிடம் ஒரே ஒரு விண்ணப்பம்.
உன் கணவர் அனுமதியுடன்
நீ உன் குடும்பத்துடன் என்னை காண வரவேண்டும்.
ஒரே ஒரு முறை உன்னை நான் நேரில் காண வேண்டும்.
உன்னை நீ கேட்குமாறு நான் 'தமிழ் செல்வி' என்று அழைக்க
நீ என் பெயரை உரிமையுடன் அழைக்க....
எப்போது வருவாய்... நட்பே...
நிச்சயம் வருவாய்....
காத்திருக்கும்
உன் நண்பன்.

-பாலு.

எழுதியவர் : பாலு (5-Sep-19, 8:09 pm)
சேர்த்தது : balu
Tanglish : en uyir thozhi
பார்வை : 443

மேலே