நட்பு

தினமும் நான் எழுதும்
நாட்குறிப்பு

என் நட்பு

என் எழுத்துக்கு பதில்
கூறுவது

இதன் சிறப்பு

ரகசியம் காப்பது சாசன
வரையின்றி

சுமக்கும் பொறுப்பு

யாரும் எளிதாய் தொட
இயலா

நம்பக பாதுகாப்பு

உடல் சார்ந்து சேர்ந்தது
இல்லை

இந்த இணைப்பு

இரு உள்ளம் சேர்ந்து
உருவானது இந்த

இணைபிரியா நட்பு

எழுதியவர் : நா.சேகர் (6-Sep-19, 6:27 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : natpu
பார்வை : 919

மேலே