தனவே

தனவேல்

தன் குலத்தை வளப்படுத்த
ஊரை சுரண்டுவோர் மத்தியில்
நீ ஊர் குளத்தை வளப்படுத்த
தூர் வாரினாய்

உன்னோடு மோதியவன்
எல்லாம் ஆகிவிட்டான்
பலி ஏனென்றால்
நீ வன்னிய இனத்தை
ஆட்சி செய்யப் பிறந்த
பாகுபலி

நீ பாகூர் மக்களுக்கு
நாட்டுப்பண் எழுதிய
தாகூர்
சட்ட சபையின்
சட்டையைப் பிடித்து
சாட்டையை சுழற்றுகிறது
உன் நா கூர்

உன் குரல் குரல் அல்ல
அது திருக்குறள்
ஏன் என்றால்.
உன் குரலிலும் இருக்கும்
ஆழ்ந்த பொருள்

நீ அந்நிய இனத்தில்
பிறக்காது ஒரு
வன்னிய இனத்தில்
பிறந்தவன்

ஞாயிறு என்றால்
சண்டே
வன்னிய மக்களின்
இருளை நீக்கும்
இந்த ஞாயிருக்குப்
பிறந்தவன்தான்
அசோக் ஷிண்டே

கந்தசாமி வைத்திருக்கிறார் தன் கையில் வேலை
ஏழை இளைஞர்களுக்கு
வேண்டும் தினம் வேலை
வேலை கிடைக்க
புதுவை அரசே அமைச்சர் ஆக்குங்கள் தனவேலை
அவர் போடுவார் சாலை
புதுவை ஆகும் சோலை


நீ என் தனவேலு
அல்ல என் நெஞ்சம்
கவர்ந்த
என் தனவேலு

நீ எங்கள் அனைவரையும்
அன்பால் ஈர்த்துவிட்டாய்
உன்பால்

உன் குரு
காடுவெட்டி குரு
நீ பாடும் நாட்டுப் பண்
வீரப்பன்
நீ தினமும் பார்க்கும் மணி
அன்புமணி

ஏழைக்கு உதவ நடந்தே
தேய்ந்தது உன் செருப்பு
உன் நிறம் கருப்பு
அது கருப்பல்ல
அதுதான் உன் சிறப்பு
ஏனென்றால்
அது மாவீரன் காடுவெட்டி குரு
ஏற்றி அனைத்து வைத்த நெருப்பு
யாருக்கும் உதவ
நீ என்றும் சொல்வதில்லை
மறுப்பு
உன்னிடம் வேகாது
எதிரியின் பருப்பு

நீ முல்லைக்குத்
தேர் கொடுக்காது
ஏழைப் பிள்ளைக்கு சோர்
கொடுத்தப் பாரி

உன் மனமோ இனிக்கும்
சக்கரை அங்கே மொய்க்கிறது
பார் ஈ

நீ வெள்ளாடை அணிபவன்
மக்களை வெள்ளாடாய்
நினையாதவன்

உனக்கு மிகவும்
பிடித்த குடை
நீ மழையில் பிடிக்கும்
கொடை நன்கொடை

தலாய்லாமா பிறக்கும்
கணம் பிறக்கும் குழந்தைதான்
அடுத்த தலாய்லாமா ஆகிறது
திபெத்தில்

நீ பிறந்தகணம் எந்த
வன்னிய வள்ளல் இறந்தானோ
விபத்தில்

திரியனையில் தீபம்
அமறும்போதுதான் வெளிச்சம் கிடைக்கும்
நீ என்று புதுவை அமைச்சர்
அரியணையில் அமறுகிறாயோ
அன்றுதான் புதுவைக்கு
வெளிச்சம் கிடைக்கும்

உன்னை எதிர்ப்பவன்
அறிவில்லாதவன்
நீயோ அறிவில் ஆதவன்

வாலிபத்தில் அனைவரும்
பூக்களைப்பற்றி நேசித்துக்கொண்டிருக்க
நீ மட்டும் மக்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தாய்

அனைவரும் பிறை காணும் வயதில்
நீ இடஒதுக்கீட்டிற்காகப் போராடி
சிறையல்லவா கண்டுகொண்டிருந்தாய்

நீ ஈகையினை இரு கைகளாய்க் கொண்டவன்
அதனால் சட்டமன்றத்தில்
இருக்கையினை அமைத்தான் ஆண்டவன்

விண்ணிலிருந்து காமராசர் கை நழுவிய
எழுதுகோல் நீ
மண்ணில் பிறந்து மக்களுக்குப்
பணிசெய்ய எழுந்த கோல் நீ

ஏழைப் பிள்ளையின்
மாமன் நீ
பாகூர் எல்லையின்
மா மன்னன் நீ

நீ உடை போடும்போதெல்லாம்
தடை ஓடியது முன்னால்
நீ நடை போடும்போதெல்லாம்
படை கூடியது பின்னால்

நீ உன் பேனாவில்
ஊற்றிய புது மை தான்
புதுமை செய்தது பாகூரில்

உன் மெய் என்றும்
பேசுவது உண்மை
நீ அனைவருக்கும்
செய்வதோ நன்மை

கண்ணன் மேல் லோகத்தில்
கர்ணனைத் தேடிக்கொண்டிருக்கின்றான்
நாற்பத்தைந்து வருடமாய்
நீ இங்கிருப்பது தெரியாமல்

உன் கைகள் சற்றே குட்டையானது
ஏழைகள் கண்ணீர் துடைப்பத்தால்
கைக்குட்டையானது

நீ ஐந்தரை அடி அன்புச்சிலை
ரவி சங்கரே கற்க வேண்டும்
உன்னிடம் வாழும் பண்புகளை

நீ ஏழை மக்களுக்கு
பயனளிக்கப் பிறந்த வாழை
மக்களே
நல்லதோர் வீணை செய்துவிட்டீர்
புழுதியில் வீசிவிடவேண்டாம் இந்த யாழை

நீ நூறாண்டும்
ஊராண்டும்
இப்பாராண்டும்
வாழ அன்போடு
வாழ்த்துகிறேன்

கவிஞர் புதுவைக்குமார்

எழுதியவர் : குமார் (11-Sep-19, 6:25 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 68

மேலே