பொருளாதார மந்த நிலை

என்னடா எப்ப பாத்தாலும் 'பொருளாதார மந்த நிலை', 'பொருளாதார மந்த நிலை'ன்னு சொல்லற? எதிர்கட்சி எதிலயாவது சேந்துட்டயா?
@@@@##
அட இல்லடா. நான் எங்க வீட்டில நிலவும் பொருளாதார மந்த நிலையைப் பத்தித்தான் கவலைப்படறேன்.
@###
உனக்கு என்னடா? நீயும் வேலைல இருக்கிற. உன் மனைவியும் வேலைல இருக்கிறாங்க. இரண்டு சம்பளம். அப்பறம் எப்படி பொருளாதார மந்த நிலை?
@@@##
குழந்தைங்க பள்ளிக் கட்டணம் மாதம் பத்தாயிரம். நாங்க வீட்ல சமைக்கிறதில்ல. செல்பேசில சொன்னா அரை மணி நேரத்தில நாம கேக்கற உணவு வகைகளை கொண்டு வந்து தர்றாங்க. மீதி சம்பளம் எல்லாம் இந்த அவசர உணவகங்களுக்கும் மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், வீட்டு வரின்னு போயிடுது. எதுவும் சேமிக்க முடிலடா.
@@@@@@@
துப்புக்கெட்ட உங் குடும்பம் உருப்படாதுடா. குடும்பம் நடத்தத் தெரியாத நீயும் உன் மனைவியும் குழந்தைகளோட ஏதாவது இலவச சோறு போடற சாமியார் மடத்திலே சேந்துக்குங்க. நீயும் உன் மனைவியும் விழுந்து புரண்டு பொருளாதாரத்தில இளங்கலைப் பட்டம் வாங்கினவங்க. வேலையும் சிபாரிசுல கெடச்சது. உனக்கெல்லாம் குடும்ப நிதி மேலாண்மை, நிர்வாகம் பத்தி என்னடா தெரியும். படிக்காத கூலிவேலை செய்யறவங்களே பரவால்லடா.
@@@@@@
எங்களுக்கு சமைச்சு சாப்பிட பிடிக்கல. பல கை பக்குவங்கள தின்னு ருசி கண்டாச்சு. இனி எப்பிடிடா எங்கள மாத்திக்கிறது?
@@@|@
சரி. சரி. நான் வர்றேன். ரொம்ப நேரம் உங் கூட இருந்தா உங்க பொருளாதார மந்த நிலை என்னையும் தொத்திக்கும்.
@@@@@
😢😢😢😢😢😢

எழுதியவர் : மலர் (9-Sep-19, 12:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 74

மேலே