தமையன்

தமையன் !!!

என்னமோ தெரியல! எதுவும் புரியல!
என் மனசு ஏங்குது- எப்பொழுதும்
என் அண்ணன் உனை நினைத்து
என் கண்கள் நனைகிறது

நம்வீட்டின் கடகுட்டியா நான் பிறக்க
குறும்புகள் பல செய்வேன்- எப்பொழுதுமே
கூடயே நடப்பாயே! தூக்கியே சுமப்பாயே !
உன்னையே மறப்பாயே எனக்காக !

தின்பண்டம் திருவிழா! புத்தகம் புத்தாடை!
தலைமகனே தாரைவார்ப்பாய் தாராளமாய்- எப்பொழுதும்
தன்னாசை துறப்பாயே! தம்பியதான் தாங்குவாயே!
என்னாசை அண்ணனே ஆருயிரே!

நானின்று கண்ணாடி மாளிகையில் கம்பீரமாயிருக்க
நீயன்று கால்வலிக்க கஷ்டப்பட்டாய்- எப்பொழுதும்
உள்ளமே உருகுதே! உசிராய் துடிக்குதே!
தியாகாமே தமையனுனை பார்க்கணுமே!!!

எழுதியவர் : (30-Sep-19, 1:44 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 73

மேலே