பூரிப்பு

முழுமதியாய் முகத்தில் பூரிப்பு
நான் காணத ஒன்றடி
தெரிந்தால் மகிழ்வேனடி நானும்
காரணம் சொல்லடி என் தோழி
நீ அறியாத ஒன்று உண்டா
என்னைப் பற்றி என் தோழி
தேவைகள் தன்னை துரத்த
கரைகடந்து சென்ற என் கணவன்
உழைத்து கலைத்து என்னைக்
காணவரும்
சேதியடி என்னைத்தேடி வந்ததடி
காலம் களவாடிய என் காதலன்
திரும்புவதால்
கனவுகள் எல்லாம் நனவாகப்
போகுதடி அதை
நினைக்கையிலே உள்ளம் பூரித்ததடி என்தோழி